வட்டம் வட்டமாய் போட்டு
மனிதர்கள்
இடைவெளி விட்டு
இடைவெளி விட்டு
நிற்க வைத்திருக்கிறது
கொரோனா
இடைவெளி என்பது
தனிமைப்படுத்தல்
இடைவெளி என்பது
தன்னிலை தண்டனை
இடைவெளி என்பது
பிரிவினை
இடைவெளி என்பது
மௌனம்
வாழ்க்கையே தற்போது
இடைவெளியில் வாழ்ந்தாலும்
மீண்டும் இடைவெளி நீங்கி
நெருக்கமாய்...
ந க துறைவன்.
சரியாகச் சொன்னீர்கள்...மீண்டும் இடைவெளி நீங்கி நெருக்கமாவோம்
ReplyDelete