Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Wednesday, 28 March 2018

அனல்

அனல் வெயில்
மரத்தில் ஒரு
அணில் கூட
விளையாடுவதைப்
பார்க்க முடியவில்லை.
மரத்தில் மறைந்தது
என் மனம்.

ந க துறைவன்.


வெயில் காலம்


Tuesday, 27 March 2018

பூரணம்

நீ பூரணம்
நான் பூரணம்
பூரணத்திலிருந்து
பூரணம்.
பூரணமாகிய
பரிபூரணம்

ந க துறைவன்.


பரிபூரணமாய்


Monday, 26 March 2018

புங்கை மரம்

குளிர் புங்கை மரநிழல்
படுத்திருந்தது எருமை
இடம் தேடி நாய்கள் போட்டி.

ந க துறைவன்.


கோடை வெம்மை


Tuesday, 20 March 2018

பறவை

இசை பாடும் பறவை
உலகெங்கும் பறந்து
மூதாதையர்களை கூர்ந்து.

Singing bird
Fly around the world
Ancestors remembered.

Thuraivan NG


நினைவுகூர்ந்து


Sunday, 18 March 2018

ஆல்பம்

மல்லிகைப்பூ வாசம்
உதட்டில் புன்னகை
கையில் செல்பி ஆல்பம்.

Jasmine aroma
The smile on the lips
In the hands of selfie album.

Thuraivan NG

ந க துறைவன்.


கையில் செல்பி


Saturday, 17 March 2018

வசந்த காலம்

ஹைக்கூ

பனி அகன்றது மெல்ல
வசந்த காலம் அரும்பியது
அழகியல் வேம்பு பூக்களோடு!
+
Snow went slowly
In the burgeoning spring
Beauty with neem flowers.

Thuraivan NG







பருவ காலம்


வாழ்த்துக்கள்

இன்று 18-03-218.

வசந்த நவராத்திரி ஆரம்பம்
மற்றும்
தெலுங்கு வருடப்பிறப்பு

நல்வாழ்த்துக்கள்.

ந க துறைவன்.


வாழ்த்துக்கள்


Friday, 16 March 2018

வேம்பூக்கள்

தரையில் உதிர்ந்த வேம்பூக்கள்
முகர்ந்து விலகியது நாய்
மழைநீரில் மிதந்தன மகிழ்ச்சியாய்.

ந க துறைவன்.


மழை நாளில்


Wednesday, 14 March 2018

அண்டவெளி

எங்கிருந்து வருகிறது இசை?
திசைநோக்கி பறக்கும் பறவை
ஏகாந்த அண்டவெளி.

ந க துறைவன்.


எகாந்தம்.


Monday, 12 March 2018

ஈரம்

முத்தத்தின் ஈரம் உதட்டில்
காய்வதற்குள் தேனீர் கொடுத்தாள்
கூடுதலாய் இனிப்பின் சுவை.

ந க துறைவன்.


இனிப்பின் சுவை


Sunday, 11 March 2018

நிழல் தேடி

இலைகளற்ற மரம்
கம்பீரம் இழந்து
ஆடுகள் நிழல் தேடி.

ந க துறைவன்.


இலைகளற்ற மரம்


பூச்சரம்

உதிர்ந்து கிடந்தது தரையில்
அவளுடைய சோக முகமாய்
வதங்கிய வாசமற்ற பூச்சரம்.

ந க துறைவன்.


வாசமற்ற பூ


Friday, 9 March 2018

பார்வை

நிழலுக்கு பார்வையில்லை
சூரியன் கண் பிரகாசிக்கிறது
வாத்துகள் குளிர்ந்த புல்வெளியில்.

ந க துறைவன்.


பார்வையற்ற நிழல்


Wednesday, 7 March 2018

கீற்று

வேலியின் நுனியில் ஓணான்
அருகில் தென்னை நிழல்
மேலே அசைகிறது கீற்று.

ந க துறைவன்.


வெளியில்.....


Tuesday, 6 March 2018

பருவநிலை

குளிர் காலம் விடைபெறுகிறது
வெப்ப நிலை மாற்றம்
இலை உதிர்காலமே வருக...

ந க துறைவன்.


பருவகா மாற்றம்


Sunday, 4 March 2018

புளிப்பு

புள்ளதாச்சி பொண்ணு
விரும்பி கேட்கிறாள்
புளிப்பு மாங்காய்.

ந க துறைவன்.


ருசியாக..


நாய்

முகர்ந்து பார்த்தது நெருங்கி
நாற்றமென்று உணர்ந்ததோ?
பசியில் அலைகிற நாய்.

ந க துறைவன்.


பசியில்...


Thursday, 1 March 2018

முல்லா கதை

முல்லா கதை

முல்லா நஸ்ருதீனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இருந்தது.
எனவே நீதிபதி அவனிடம், "முல்லா உனக்கு வயது என்ன?,
" நாற்பது " என்றான் அவன்.
உடனே நீதிபதி, "ஆனால் இது விநோதமாக உள்ளது. நீ என்னை ஆச்சரியமடையச் செய்கிறாய். ஏனெனில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நீ இதே நீதிமன்றத்திற்கு வந்தாய். அப்போது அந்த நேரத்திலும் நீ நாற்பது என்று தான் கூறினாய் " என்றார்.
அதற்கு முல்லா, "ஆம், நான் ஒரு கொள்கை மாறாத மனிதன். ஒருமுறை நான் ஏதாவது ஒன்றை கூறிவிட்டால், நீங்கள் என்னை நம்பலாம். நான் வேறு எதையும் கூறமாட்டேன்" என்றான்.

ஓஷோ
ரகசியமாய் ஒரு ரகசியம் - பாகம் - 2, பக்கம் - 163 - 164.
தகவல் : ந க துறைவன்.


முல்லா கதை