Labels
Thursday, 30 June 2022
Wednesday, 29 June 2022
பூனை ( கவிதை)
பூனை
கவிதை
மின்மினி பூச்சியின் ஒளி
நிலவின் ஒளி
தெரு விளக்கு ஒளி
அனைத்தும் ஒளிர்ந்தாலும்
கள்ளப் பூனைக்கு
தேவை என்னவோ
இருட்டு தான்
அந்த இருட்டிலும்
திருட்டு பார்வையில்
அக்கம் பக்கம் பார்த்து
கருவாடு வாசனை
நுகர்ந்து பதுங்கி
ஒதுங்குவது என்னவோ
அந்த மூலை
வீட்டிற்குள் தான்...!!
ந க துறைவன்
Tuesday, 28 June 2022
தும்பி ( கவிதை )
கவிதை
தும்பி
நானொரு தும்பி
மேகமூட்டமான வெளியில்
அங்கும் இங்குமாய் பறந்து
திரிந்து அலைகிறேன்
அந்த நந்தியாவட்டை பூவின்
மீது அமர்ந்து எழுகிறேன்
பூ பறிக்க வந்த சிறுவன்
என்னைப் பிடிக்க முயற்சிக்கிறான்
அவன் கைகளில் அகப்படாமல்
போக்குக் காட்டிபறக்கிறேன்
மேலும் கீழுமாய் எதிரே வந்த
இன்னொரு தும்பி
என்ன பிரச்சினை என்று
விசாரித்தது
பிரச்சினை ஏதுமில்லை
அந்த சிறுவனோடு கொஞ்சநேரம்
விளையாட்டு விட்டு
வரலாமென்று ஆசை
அதான் விளையாடிய களைப்பு
கருத்து வந்த மேகம் சில மணித்துளிகளில்
தூறல் போடத் துவங்கியது
வேகமாய் பறந்து போன தும்பி
எங்கு போய் ஒதுங்கியது என்று
தெரியவில்லை
சிறுவனுக்கும் எனக்கும்...!!
ந க துறைவன்.
Saturday, 25 June 2022
Friday, 24 June 2022
பால் ( கவிதை )
கவிதை
பால்
அவள் அறியாமலேயே சுரந்தது
ஜாக்கெட் முழுமையும் ஈரம்
முலை நுனியில் பால்.
She unknowingly exploited
The jacket is completely wet
Milk at the tip of the breast.
Thuraivan NG
Wednesday, 22 June 2022
உயரம் ( ஹைக்கூ )
ஹைக்கூ கவிதை
உயரம்
எனக்கு குள்ளன் என்று பெயர்
அருகம்புல் அறியுமோ?
பனை மரத்தின் உயரம்.
Name me dwarf
Do you know the neighborhood
The height of the palm tree.
Thuraivan NG
Monday, 20 June 2022
குரு ( ஹைக்கூ கவிதைகள்
குரு
ஹைக்கூ கவிதைகள்
1.
புத்தன் சின்முத்திரையில்
விரல் நுனியில் ஒளிரும்
பௌர்ணமி நிலவு.
2.
குருவைப் பற்றி
நினைக்காதவனுக்குள் தான்
எப்பொழுதும் இருக்கிறார் குரு.
3.
பெயர் அற்றவன் நான்
பிரபஞ்சம் எனது சொத்து
கையிருப்பு ஏதுமில்லை எனக்கு.
ந க துறைவன்.
Saturday, 18 June 2022
குரு ( ஹைக்கூ கவிதைகள் )
குரு
ஹைக்கூ கவிதைகள்
1.
சீடன் உறவு துறந்தான்
பக்தன் காதல் துறந்தான்
எதையும் துறக்காமல் குரு.
2
எங்கெங்கோ அலைந்து
மனம் சோர்ந்து போனான்
குருவைத் தேடிய சீடன்.
3.
பூனைக்கு குருவின் மீது பாசம்
அருகில் அமர்ந்து தினமும்
கற்கிறது ஜென்.
4.
பௌர்ணமி கவிதை வாசித்தாள்
கேட்டு சிரித்தது காற்று
சிலிர்த்தது வெட்கத்தில் நிலா.
5.
பௌர்ணமி தோறும் அலைந்து
காணாமல் கூடு திரும்பியது
புத்தனைத் தேடிய புறா.
ந க துறைவன் வேலூர்.
Friday, 17 June 2022
செம்பருத்தி பூ ( கவிதை )
கவிதை
செம்பருத்தி பூ
மருத்துவமனை
உள் நோயாளியின்
சன்னலுக்கு வெளியே
அழகாய் பூத்து
அசைந்தாடி சிரிக்கிறது
செம்பருத்தி பூ
அவள் ரசிக்கிறாள்
அதன்
அழகை மௌனமாய்
நோய் மறந்து
மெய் மறந்து
சில நிமிடம்...
ந க துறைவன்.