சும்மா இரு
Labels
Monday, 29 June 2020
Sunday, 28 June 2020
Saturday, 27 June 2020
Friday, 26 June 2020
நிழல்கள் ( மினி கவிதை )
நிழல்கள்
மூலிகைகள் நிறைந்த
மலையருவி
கரையெங்கும் விருட்சங்கள்
நீருக்குள்
அடித்து செல்லாது
அலைகளாய் அசைகின்றன
நிழல்கள்.
ந க துறைவன்.
நரி ( கதை )
நரி
" அவன் குணம் என்ன? " என்று கேட்டான் அருகில் இருந்தவன்.
" அது தெரியாதா உனக்கு? " என்று சொன்னான் இன்னொருவன்.
" நரிக்குணம் " என்றான் மூன்றாமவன்.
" நரி
வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன?
மேலே விழுந்து பிடுங்காமல்
போனால் சரி " என்றான் நான்காமவன்.
நகரில் வலம் வருகின்றன
கூட்டத்தோடு கலந்து
பல வஞ்சக நரிகள்.
உறங்கும் நகரை
உலுக்கி எழுப்புங்கள்
விழித்தெழட்டும்.
ந க துறைவன்.
வழித்துணை
வழித்துணை
1.
கொடுத்தவர் அப்பா
வாங்கியவள் அம்மா
பரிசாக வந்தவன் நான்.
2.
பால் முற்றிய சோளக்கதிர்கள்
காவல் பொம்மை ஏமாற்றி
இரைதேடும் குருவிகள்.
3.
காவியுடை கழுத்தில் ருத்திராட்சம் கையில் பிச்சைப்பாத்திரம்
வழித்துணைக்கு சன்யாசினி.
4.
எனக்கு இறைவனைத் தெரியாது
இறைவனுக்கு என்னைத் தெரியாது
ஆன்மாவே என் அப்பா.
5.
எழுதாதப் படைப்பு கலைமனம்
குறைந்த பேச்சு தெளிந்த ஞானம்
புத்தனின் மௌனமே கவிதை.
6.
நசுக்கி அழிப்பதற்குள்
தப்பியோடி விட்டது இன்னும்
எறும்பு கடித்த இடத்தில் வலி.
7.
உறவு நெருக்கம்
உறக்கம் கெடுத்தது
பூவும் அல்வாவும்.
8.
கீழே தாழ்ந்து நிற்கிறேன்
ஆணவத்தோடு மௌனமாய்
அழகு சிதைந்த மலைக்கோட்டை.
9.
நீண்ட நாள்களாக கதவு சாத்தபட்டது
பக்தர்களைக் காணாது தவிப்பு
ஓய்வெடுக்கும் மூலவர்.
10.
பேசாத கற்சிலை அருகில்
காதல்மொழி பேசும் காதலர்கள்
பாதுகாக்கும் கல்தூண் யாளிகள்.
11.
அரை இருட்டில் கோயில் மண்டபம்
காதலர்கள் சந்திப்பு மறைவிடம் மௌனமாய் பார்க்கும் சிலைகள்.
12.
இணைந்து நடந்து வருகிறேன் உன் கூந்தல் சூடிய
மல்லிகைப்பூ வாசம் நுகர்ந்து.
ந க துறைவன்.
Thursday, 25 June 2020
Wednesday, 24 June 2020
அருள் வாக்கு ( கவிதை )
ஊருக்கு அருள்வாக்கு சொன்னாள்
கேட்டவர்க்கு தீர்வு சொன்னாள்
மலையேற உத்தரவு கேட்டாள்
அருகில் இருந்தவர்
அவள் கையில் வைத்தார்
கற்பூரம்
தீச்சூவாலையோடு
வாயில் போட்டு விழுங்கினாள்
அடங்கி அமைதியானாள்
சாமிவெறியாடிய காமாட்சி
மறுநொடி ஏதும் தெரியாமல்
மௌனமாய் நின்றாள்
அம்மன் எதிரில்
பிரார்த்தனையோடு
கைக்கூப்பி வணங்கி...
ந க துறைவன்.