ஒரு குள்ள நரி, தோட்டத்தைச் சுற்றி முள்கம்பி வேலி. குள்ளநரி வேலியைத்
தாண்டியது. தவறி விட்டது நரி. உடனே வேலிக்கம்பியைப் பிடித்துக் கொண்டது.
முள்கம்பி கையைக் கீரி, கிழித்து விட்டது. இரத்தம் பெருகி ஓட கதறி
ஊளையிட்டது.
“ வேலியே! உன் உதவியை நாடினேன். உதவtவில்லை. எனக்கு காயத்தை ஏற்படுத்திக்
கதற வைத்தாயே! சரியா? நியாயமா? ”
“ நண்பா! நீ பெரிய தவறு செய்தாய். என்னை ஏன் பிடித்தாய்? நான் எல்லோரையும்
தடுக்கத் தானே இருக்கிறேன். என்னைத் தாண்ட முயன்றதே தவறு? ”
“ ஆம். உண்மைதான், உதவி கேட்டு ஓடி வருவது பெரிய தவறு. இப்போதே
உணர்கின்றேன். ”
பாடம் கேட்டேன், கற்றேன். இப்போது நன்கு புரிந்துக் கொண்டேன்.
ஆதாரம் : ஈசாப் நீதிக்கதைகள் – ஆ.மா.சகதீசன் – பக்கம் – 19.
தகவல் ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment