இன்று
சர்வதேச குழந்தைகள் தினம்
நல்வாழ்த்துக்கள்.
ந க துறைவன்.
குழந்தைகள் தினம்
இக்கணம் ஏதோவொரு
இலக்கோடு
பலகாததூரம் சலிப்பின்றி
அப்பறவை
பயணிக்கிறது ஒரு திசையில்.
ந க துறைவன்.
சலிப்பற்ற பயணம்
உப்பு நிறம்மாறி கரித்தது
உயிர்கள் இழந்து வீடுகளில் சோகம்
குருதியில் உறைந்தது மண்.
ந க துறைவன்.
நிறம் மாறிய உப்பு
சூரியன் சிவந்தான்
கடல்நீர் பிரதிபலித்தது
முத்துகள் ரத்தநிறம்.
He was the Sun Red
Seawater is reflected
Blood coloured pearls.
Thuraivan NG
வெண்முத்து நிறம் மாறல்
தூத்துக்குடி
போராட்டத்தில்
உயிரிழந்தவர்களுக்கு
எனது ஆழ்ந்த அஞ்சலி.
ந க துறைவன்.
தூத்துக்குடி போராட்டம்
அவளின் அதிகாரம் உச்சம்
யாரும் தலையிட மறுப்பு
அகங்காரம் தொனி ஆயுள்வரை.
ந க துறைவன்.
மன இயல்பு
" அனைத்துங் கற்பனையே; ஆத்மாவோ கட்டற்ற பழம்பொருள்" என்றுணர்ந்த தீரன் சிறுவனைப்போல் என்ன பழகுவது?
அஷ்டாவக்ர கீதை.
அஷ்டாவக்ர கீதை உரை
கண் பார்வையால்
எதையோ தேடுகிறாய்?
எதுவென்று புலப்படவில்லை
உன்னுள் நிறைந்த மௌனமோ
எதையென்று
வெளிப்படுத்தி உணர்த்த
மறுக்கிறது.
கடலின் ஆழமிக்கது
உனது
புதிர் மனம்
ந க துறைவன்.
பார்வை வீசி...
1.
சீரியஸான விஷயத்தை எளிதாக
எடுத்துக் கொள்கிறார்கள்
ஒன்றுமில்லாத விஷத்தைப்
பெரியதாக்கி விடுகிறார்கள்.
2.
அந்த காக்கா
யார்?
தாத்தாவா? அப்பாவா?
வைத்த படையல் சோறு
சாப்பிடுவார்களா?
இன்று அமாவாசை.
3.
கோடை விடுமுறை
குழந்தைகள்
ஊரிலிருந்து வருகை
கலகலப்பாக இருக்கிறது
வீடு.
4.
புள்ளிகள் இணை
புதிய கோலம் வரும்
எறும்புகள் ரசிக்கட்டும்.
5.
என்னுள்
உன்னைத் தேடு.
ந க துறைவன்.
அனுபவங்கள் பகிர்வு
எல்லையற்ற கருணை மனம்
எந்த மரமும் நிராகரிப்பதில்லை
பறவைகள் அமர்ந்து ஒய்வெடுப்பதற்கு.
ந.க துறைவன்.
பறவைகள் ஓய்வு
1.
வெற்றிடம்
வெற்றிடமாக
இருந்தாலே அழகு.
உன் வெற்றிடம் தான்
எனக்கு
பேரழகு.
2.
குளிர்பானம்
கோடை வெயிலுக்கு
அவனுக்கு பிடித்தது
அவன் குடித்தான்
அவளுக்கு பிடித்தது
அவள் குடித்தால்
இருவரின்
சுவையே வேறு வேறு
3.
நீட்
எழுதி முடித்து
கூந்தல் முடிக்காமல்
புதிய திரௌபதிகள்
மௌனமாய்...
கலைந்தனர்.
4.
எல்லாம் கழற்றி விட்டு
எழுத அனுமதிப்பது தான்
தேசிய தேர்வு நீட்.
5.
பூங்காவில் கூடினார்கள்
கவிதை வாசித்தார்கள்
வண்ணத்துப்பூச்சிகள்
கேட்டு பறந்தன அப்பால்...
6.
பூங்கா நிறைய கூட்டம்
தும்பிகள் துறத்தும் விளையாட்டு
சந்தோஷம் இல்லாத
சில முகங்கள்.
7.
எழுது ...அழி
எழுது ...அழி
தலைசீவு
இது
உருவாக்கும்போதே
எழுதப்பட்டப்
பென்சிலின் விதி.
8.
நாசி நுகர்ந்தது
நறுமணம்
அறையெஙகும்
சாம்பிராணி புகை
கொசுக்களுக்கு பகை.
ந க துறைவன்.
குறுங்கவிதைகள்
புதர்கள் அடர்ந்த வனப்பகுதி
ஊர்எல்லைக்கு வெளியே
காவல் இருக்கிறாள் குலதெய்வம்.
ந க துறைவன்.
காவல் காக்கிறாள்
1.
சொல்வதெல்லாம்
புரிந்து விட்டால்
சிரமம் இல்லை
சொல்வதெல்லாம்
புரிந்ததென்றும்
சொல்வதற்கிலலை.
2.
சொல்வது எல்லாமே
புரிந்து விடும்
சொல்வதைப் பொறுத்து.
3.
கார்டுகளிலே தான்
காலம் தள்ளுகிறோம்
இனி
கார்டுகளே கைடுகள்.
4.
யாருடைய பிரச்சனையோ
சலிக்காமல் பேசினர்
என்னருகில்
பரிச்சயமற்ற நபர்கள்.
5.
மக்களை நிராகரிப்பவர்கள்
மக்கள் நிராகரிப்பார்கள்.
6.
வெயிலுக்கு
குளிச்சியாய்
எழுதினான்
நுங்கு கவிதை.
ந க துறைவன்.
புரிதல்
இரவு
1.
உயிர்களின் உறவுகள்
எத்தனை ரகசியமாய்
உணர்ந்து அனுபவிக்கிறது
அந்தரங்கமாய் இருட்டு.
2.
இளம் சூட்டு புழுக்கம்
இருளில் இரைதேடி நகர்கிறது
வளைந்து நெளிந்து பூரான்.
3.
மன இறுக்கம், அவதி, உலைச்சல் என
அமைதியின்மையால்
நிம்மதி இழக்கும்
மானுடருக்கு
சில மணி நேரம்
விடுதலை
அளிக்கிறது இரவு.
4.
அவள் என்னோடு
அந்தரங்கமாய் பேசி
களிப்பதற்கு
துணை புரிகிறாள்
இரவு தோழி.
5.
இரவை யாரும்
பழித்து பேசுவதில்லை
எல்லாருமே
புகழ்ந்து பேசுகிறார்கள்
புகழ்ச்சியில் தான்
அவள்
மயங்கி நெருங்குகிறாள்
என்னிடம்!
ந க துறைவன்.
இரவு