மூச்சு காற்று
Labels
Thursday 26 April 2018
Wednesday 25 April 2018
மௌனம்
மௌனம்
1.
மௌனமாய் இயங்குகிறது
பிரபஞ்சம்
வெளி தான்
ஆர்ப்பரிக்கிறது
இரைச்சலாய் எந்நேரமும்...
2.
நான்
மனமற்று கம்பீரமாய்
மௌனம்
அனுஷ்டிக்கிறது
அழகான பூக்கள்.
3.
இளநீர்க்குள்
நிரம்பி இருக்கிறது
தென்னையின்
ஆழ்ந்த மௌனம்.
4.
மொழி அற்ற
மொழியே
மௌனம்.
5.
நடைபயிற்சி போது
செம்பருத்தி பூ
தரிசனம்
உபதேசித்தது
உள்மௌனம்.
ந க துறைவன்.
Apr 26, 2018 9:36:35 AM
மௌனமாய்...
உள்தாகம்
சில்லென்று குடிப்பதற்கு
குளிர்பானக் கடையில் கூட்டம்
வாங்கி பருகினாலும்
உள்தாகம் தணியாமல்
முகமெல்லாம் வியர்வைத்துளிகள்.
ந க துறைவன்.
கோடை வெப்பம்
Tuesday 24 April 2018
நிழல் அற்ற..
நிழல் அற்ற வெட்டவெளி
பிரதிபலிக்கின்றன வெப்பக்கதிர்கள்
பறந்து செல்கிறது சட்டென
பாறைமேல் அமர்ந்த பறவை.
ந க துறைவன்.
கோடைவெயில்
Monday 23 April 2018
Sunday 22 April 2018
Saturday 21 April 2018
சமாளிப்பு
சமாளிப்பு
1.
எங்கும்
வெக்கையாக இருக்கிறது
மரங்களே
கொஞ்சம் வேகமாக
விசுறுங்கள்.
2.
சமாளிப்புக்காக
சொல்லும் பொய்யே
அவர் யார்? என்பதை
உணர்த்தி விடுகிறது.
3.
டீ
கோப்பைகள்
இடையே
இருவர் உரையாடல்
இனிப்பாய்!.
4.
நிறைய தகவல்கள்
கிடைக்கின்றன
ஜோக்ஸ்
எழுதுபவர்களுக்கு.
5.
தமிழ் நாட்டில்
நகைச்சுவை
பேச்சுக்கு
பஞ்சமே இல்லை.
ந க துறைவன்.
சில துளிகள்
Friday 20 April 2018
Thursday 19 April 2018
அடையாளம்
பால்காரன் மணிசத்தம். எழுந்து ஓடும் நாய்கள். கோலத்தின் மீது பேப்பர் போடும் சிறுவனின் சைக்கிள் டையர் அடையாளம். நடைபயிற்சி சென்றவர்கள் வியர்த்து திரும்புகிறார்கள். நந்தியாவட்டைச் செடியில் பூப்பறிக்கும் அடுத்த வீட்டு பையன். பால் குடிக்க அடம், ஆர்ப்பாட்டம் செய்யும் குழந்தை
அவசரமாக மார்க்கெட் செல்லும் நபரின் பைக் சத்தம். மாடுகளுக்கு புல் அறுத்து சுமையோடு மொபைட்டில் பறக்கும் பெண். இந்த ரம்மியமான காலைப்பொழுதில் வேம்பில் அமர்ந்து கீச்சிடும் சிட்டுக்குருவிகள். மெல்ல தன் ஒளிக்கதிர்கள் வீசும் சூரியன் பயணம்.
இப்படி எல்லாமாக துரித கதியில் இயங்குகிறது அன்றாட வாழ்க்கை.
ந க துறைவன்.
உரைநடை
Wednesday 18 April 2018
இருக்கிறார்
அவர் இங்கு இருந்திருக்கிறார். இல்லை என்றால் எனக்கோ, மற்றவர்க்கோ தெரிந்திருக்கும் அல்லது தெரிந்திருக்காது. ஆனால் அவர் இங்கு எப்போது இருந்தார் என்றும் கவனம் இல்லை.
தெரிந்தவர்கள் சொன்னது தான்.
" அவர் இங்கு இருந்தார் "
ந க துறைவன்.
உரை நடை
இருக்கிறார்
அவர் இங்கு இருந்திருக்கிறார். இல்லை என்றால் எனக்கோ, மற்றவர்க்கோ தெரிந்திருக்கும் அல்லது தெரிந்திருக்காது. ஆனால் அவர் இங்கு எப்போது இருந்தார் என்றும் கவனம் இல்லை.
தெரிந்தவர்கள் சொன்னது தான்.
" அவர் இங்கு இருந்தார் "
ந க துறைவன்.
உரை நடை
தேடல்
தேடல்
×
வெயிலுக்கு
நிழல் தேடுகிறேன்
நிழல்
சூடாக தகிக்கிறது.
×
குளிர் நிழல் கொடுத்தாலும்
சூரிய வெப்பம் உணர்ந்து
சுணங்காமல்
சும்மா இருக்கிறது
மரம்.
ந க துறைவன்.
குறுங்கவிதைகள்
முதல் வெட்கம்
முதல் வெட்கம்
+
வெட்கத்தில்
வெட்கம்
காதல் வெட்கமே
முதல் வெட்கம்.
×
பட்டினத்தார் பாடல்
வரிகளில் தான்
எத்தனை எத்தனை
பெண்மையின்
அழகியல்
வாசிக்க வாசிக்க
பேரின்பம்.
×
அரூபமாய்
நடக்கிறாள் வீதியில்
வெட்கத்தில்
தலைகுனிந்து
கண்ணகி.
×
இப்பொழுது
நடைபெறுவது
65 - வது
திருவிளையாடல்.
×
சிவன்
உடல் அசைத்தான்
சக்தி
உடல் சலித்தாள்
எல்லாம் சக்தி மயம்
பக்தி நயம்.
ந க துறைவன்.
கவிதைகள்
Sunday 15 April 2018
இளம் பிறை
ஆசிபா
இளம் பிறையின்
யோனிக்குள்
எத்தனை எத்தனை
அரக்க லிங்கச்
சதைப்பிண்டங்கள்
குருதியில் குளித்தன.
மூச்சுத்திணறலில்
முரட்டு வலியில்
சின்னஞ்சிறு மலரின்
அவல ஓலி
கேட்கிலையோ
காமக்னி தேவி?
தேவி
நீ காம ரூபிணி
ஆசிபாவை சிதைத்த
காமுகர்களை
அழிக்க எழுந்து
வருவாயா தேவி.
உன் கருவறையில்
வன்காமம் என்ப....?
ந க துறைவன்.
பாலியல் வன்முறை
Saturday 14 April 2018
ஆசிபா
ஆசிபா - Ashifa
ஆ சியாவே
சி தைந்த உருவைப்
பா ர்த்து கதறுகிறது
........கண்ணே உனக்காக?
ந க துறைவன்.
பாலியல் கொடுமை
Friday 13 April 2018
வசந்த விழா
சித்திரை
பொன்னிற இலைகள் உதிர்த்து
புதிய துளிர்கள் பசுமையாய்
இயற்கையின் வசந்த விழா.
ந க துறைவன்.
புது வருடம்
Sunday 8 April 2018
சின்னமாய்..
சிதிலமடைந்த சுவர்
நினைவு சின்னமாய்
மூதாதையர் வாழ்ந்த வீடு.
Dilapidated walls
You monument
Their ancestors lived in the house.
ந க துறைவன்.
மூதாதையர் வீடு
Saturday 7 April 2018
Tuesday 3 April 2018
சிறுவர் பாடல்.
சிறுவர் பாடல்.
முலாம் பழம்.
கோடை காலப் பழம்
வெப்பம் போக்கும் பழம்
சத்து நிறைந்த பழம்
சூடு தணிக்கும் பழம்.
இனிப்பு ருசிக்கும் பழம்
நாக்கில் கரையும் பழம்
உடல் குளிர்ச்சி பழம்
விரும்பி சுவைக்கும் பழம்.
குண்டு குண்டு பழம்
வெண்மை குண்டு பழம்
தின்ன நல்ல பழம்
பழுத்த முலாம் பழம்.
ந க துறைவன்.
முலாம் பழம்