Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Saturday 19 November 2022

களவு ( ஹைக்கூ )

யாரும் களவாடவில்லை
காவல் இல்லாத அமாவாசை இரவு
சிதறிய நட்சத்திர வைரங்கள்.

ந க துறைவன் வேலூர் 

Friday 18 November 2022

தும்பி ( ஹைக்கூ )

வெளியில் வந்து நின்றேன் நான்
மழை செய்தி கூறிவிட்டு
பறந்து சென்றது தும்பி.

ந க துறைவன் வேலூர் 

Sunday 13 November 2022

கை நிறைய...( கவிதை )

அவன் வலதுகை மணிக்கட்டில்
வண்ண வண்ண கயிறுகள் அழகு
அம்மா, மனைவி பிராத்தனை
கோயில் தவறாமல் சென்று
நிறைவேற்றிச் சுற்றி வந்ததால்
அவர்களுக்கு நிம்மதி
அவர்கள் ஆசையாய் கட்டியதை
அவன் வேண்டாமென்று மறுத்ததில்லை
எப்பொழுதும் போலவே
அவன் மனம் சஞ்சலத்தில் உழன்றது
பெரும் அவஸ்தை
சிலர் பரிகாரம் செய்தால்
பலன் கிடைக்கும் என்று
ஆலோசனை வழங்கினார்கள்
எத்தனையோ பரிகாரம் தவறாமல் செய்தும்
அவன் விதியும் மாறவில்லை
நிதியும் உயரவில்லை
கடல் அலை அலையாய்
வெளி வாங்கி
உள் வாங்குவதுமாய்
இயங்குகிறது வாழ்க்கை.

ந க துறைவன் வேலூர்.

Friday 7 October 2022

அவமானம் ( மேற்கோள் )

அவமானத்தின் வலி
அழகிய வாழ்க்கைக்கான வழி.

    - படித்த வரிகள்

ந க துறைவன்.

Thursday 29 September 2022

நேரம் ( கவிதை )

கவிதை
நேரம்

நேரம் கடந்து கொண்டேயிருக்கிறது
ஒவ்வொரு நொடியும்
நேரம் நாம் தான் தவறாமல்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
நேரம் இல்லை என்று
சொல்வதில் அர்த்தமில்லை
நேரம் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறது
அவனுக்கு என்ன அவசரமோ?
தெரியவில்லை
எனக்கு நேரமில்லை என்று சொல்லி
பரபரப்பாகப் பயணிக்கின்றான்
வாகனத்தில்
ஏதோவொரு அவசர வேலையாய்
நேரத்தோடு...

ந க துறைவன் வேலூர்.

Monday 12 September 2022

பலி ( ஹைக்கூ )


பலி 
ஹைக்கூ கவிதைகள் 

1. 
குலதெய்வம் வழிபாடு
மண்ணில் உறைந்திருக்கிறது
பலி ஆட்டின் இரத்தம்.

2.
மழையில் நனையாமல்
நிலையாய் மூடிய தேர்
பகலில் நகர்கிறது நிழல்.

3.
மண் குடிசை
வசிப்பது சொந்த கூடு
பனைமர சாளரத்தில் குளவி.

4.
மரங்கள் அற்ற நெடுஞ்சாலை
வண்ணக் கொடிகள் பறக்கின்றன
வீட்டுமனை விளம்பரங்கள்.

5.
பழுத்த கொய்யா பழம்
குருவிகள் கொத்தி தின்றன
பசியால் அணில் குஞ்சுகள்.

ந க துறைவன் வேலூர் 

Sunday 11 September 2022

பசி ( ஹைக்கூ )

பழுத்த கொய்யா பழம்
குருவிகள் கொத்தி தின்றன
பசியால் அணில் குஞ்சுகள்.

Ripe guava fruit
The sparrows are chirping
Hungry baby squirrels.

Thuraivan NG 

Sunday 4 September 2022

வீடு ( ஹைக்கூ )

பாழடைந்த வீடு
சுவரில் வெடிப்பு
உறவுகள் பிளவு.

Dilapidated house
Crack in the Wall
Relationships split.

Thuraivan NG 

Saturday 3 September 2022

தரிசனம்

கவிதை
தரிசனம்

காற்றில் உருண்டு வந்தன
சருகு இலைகள்
மெதுவாக நின்றன
தியான புத்தனின்
பாதம் அருகில்
வலம் வந்தன எறும்புகள்
வேறு இடம் தேடி செல்கின்றன
யாருமற்ற ஏகாந்த வெளியில்
புத்தனைக் காண எவருமில்லை
புத்தனுக்கும் கவலையில்லை
புத்தரைத் தினமும்
தரிசனம் செய்தபடியே
பகலில் கதிரவன்
இரவில் நிலா...!!

ந க துறைவன் வேலூர்.


Friday 26 August 2022

துக்கம் ( கவிதை )

துக்கம்

உக்கிரமான மழை சத்தம்
இருள் உள்வாங்கியது
அவள் தூக்கம் கலைந்தது
விழித்தாள்
துணையற்ற துக்கம்.


ந க துறைவன் வேலூர் 



Sunday 7 August 2022

மகள் ( குட்டி கதை )

மகளை எப்பொழுது பார்த்தாலும்
குறை சொல்லிக் கொண்டே இருப்பாள் அம்மா.
நேற்று அவள் வேலையில் சேர்ந்து வாங்கிய 
முதல் மாத சம்பளம் தன் அம்மாவிடம் கொடுத்ததும், 
பெரும் மகிழ்ச்சியுடன் கையில் வாங்கியவள் முகத்தில் சிரிப்பு.
மகளை வாழ்த்தி உச்சி முகர்ந்து முத்தமிட்டாள் அம்மா.

இனியும், அம்மா தன் மகளை எப்படி நடத்துவாள்?

ந க துறைவன் வேலூர்.


Thursday 4 August 2022

மனுஷி ( கவிதைகள் )

கவிதைகள்
மனுஷி

1.
சாந்தமான முகவொளி
வனதுர்க்கை ராகுகால தரிசனம்
அக்கணம் அழியுமோ ஆணவம்?

2.
வன்மை திமிர் அட்டகாசம்
நெருங்கிய காமுகர்களைத் தனித்து
வதம் செய்தாள் மகிஷாசுரமர்த்தினி.

3.
காமவெறி பிடித்த மிருகங்கள்
போரில் வென்று வீழ்த்தினாள்
சூலத்தின் கீழ் அசுரபிணம்.

4.
அசுரர்கள் ஆணவம் அழித்தாள்
பெண் குலம் காத்தாள்
கற்பு காத்த கனகதுர்க்கை.

5.
துஷடர்களை அழித்த கை
துக்கத்தை ஒழித்த கை
பெண்களைக் காத்த துர்க்கை.

6.
வானுக்கு அப்பால்
பூமிக்கு அப்பால் உள்ளவள்
அனைவருக்கும் சக்திதேவி.

7.
ரத்த பீஜர்கள் சிந்திய ரத்தத்துளிகள்
பட்டுத் தெறித்து ஈரம்
துர்க்கையின் சிவப்பு ஆடை.

8.
வன்கோபம்  தணிந்து மோனம்
அடையாளமாய் ரத்தத்துளிகள்
அணிந்தால் வெற்றித் திலகம்.

9.
அசுர கணங்களுக்கு அவள் உக்கிர தேவி
உபாசகர்களுக்கு அவள் வாக்தேவி
எனக்கு அவள் இஷ்டதேவி.

10.
அசுரர்களுக்கு அவள் மகிஷி
தேவர்களுக்கு அவள் மகாசக்தி
மங்கையர் குலத்திற்கு மனுஷி.

ந க துறைவன் வேலூர்.
ஃஃஃ


Saturday 23 July 2022

இலக்கியம் ( மேற்கோள் )

இலக்கியம் மக்களின் மொழியை பேசுவதில்லை; 
மாறாக, மக்களே இலக்கியத்தின் மொழியை பேசுகிறார்கள்.

       -  பிராட்க்ஸி.

படித்த வரிகள்

ந க துறைவன்.

Saturday 16 July 2022

கண்ணாடி ( ஹைக்கூ )

கவிதைகள்

கண்ணாடி

1.
மௌன மொழி
எப்பொழுதும் தியானம்
சுவரில் கண்ணாடி.
2.
நிலா அழகு பார்க்கும்
கண்ணாடி
கடல்.
3.
நட்சத்திர ஓவியக் கண்காட்சி
பிரதிபலிக்கும் கண்ணாடி
பெரிய குளம்.
4.
கண்ணாடி தெரியும்
அவள் அங்க அழகின் பூர்ண
ரகசிய உள் வெளி.
5.
அவள் சிரித்தாள் சிரிக்கும்
அவள் அழுதாள் அழும்
வெகுளித் தோழி கண்ணாடி.

ந க துறைவன்.

Friday 8 July 2022

தனிமை ( ஹைக்கூ )

ஹைக்கூ
தனிமை

இயற்கை சூழ்உலகு
ஏகாந்த தனிமை பயணம்
ஓய்வாய் மனம் ஒன்றிணைந்து...

Natural environment
Solitary journey
Relax and unit your mind.

Thuraivan NG 

Thursday 7 July 2022

முச்சுவை ( ஹைக்கூ கவிதைகள் )

ஹைக்கூ கவிதைகள்

1.
விருந்தினர் சாப்பிட்ட இனிப்பு காரம் டீ
அவர்கள் வார்த்தைகளோடு
மீதம் இருந்தது தட்டில்.

2.
கைத்தட்டல் பாட்டு சிரிப்பு
திரும்பி பார்த்தனர்
டீக்கடை வாசலில் திருநங்கைகள்.

3.
நகரில் கலவரம்
தீ வைப்பு
சாம்பலானது டீக்கடை.

4.
உடலில் ரத்த வியர்வை
கழைக்கூத்தாடி களைப்பு
கேட்டான் டீக்கடையில் யாசகம்.

5.
கற்பு காதல் காமம்
பால் சர்க்கரை டீத்தூள்
முச்சுவை கலந்ததே நம் காதல்.

ந க துறைவன் வேலூர்.

Saturday 2 July 2022

டீ டைம் Tea Time ( ஹைக்கூ கவிதைகள்)

1.
சோப்பு போட்டும் நீங்கவில்லை
டீ டம்பளர் கழுவும் பையன்
சட்டை டீக்கறை.

2
படுத்துக் கொண்டே பருகினோம்
அவளும் நானும் படுக்கையில்
களைப்பிற்கு சூடான டீ.

3.
கிராமத்தில் சாவு
ஊர் திரும்பும் உறவுகள்
பஸ் ஏறும்முன் குடித்தனர் டீ.

ந க துறைவன் வேலூர்.

Friday 1 July 2022

விரல்கள்

கை விரல்கள் பத்தும்
படைப்பின் உன்னதம்
இயங்கும் ஒவ்வொரு கணமும்
ஓய்வற்ற அசைவுகள்
ஒவ்வொரு விரலும் ஒரு விசித்திரம் 
அமைதி அறியாத செயல்திறன்
நம்பிக்கையே விரல்களின் கனவு
வெற்றிக்கு முன்னாக்கு பயணம்
சரித்திரம் படைக்க துடிக்கும் எழுச்சி
சுட்டும் குறியீடுகள் மொழியற்ற மொழி
காதல் ஏற்கும் கனிந்த குணம்
துயரம் துடைக்கும் கைக்குட்டை
வலிகளுக்கு நிவாரணம் தேடும் அணைப்பு
உணர்வுகளைப் புரிந்து செயலாற்றும்
ஆற்றல் மிக்க இயற்கை நரம்புரு
மனிதன் ஆரோக்கியம் ஆயுள் எல்லாமே
அவனவன் 
விரல் நுனியில் தான் ...!!

ந க துறைவன் வேலூர்.


மகிழ்ச்சி ( மேற்கோள்)

Wednesday 29 June 2022

பூனை ( கவிதை)

பூனை
கவிதை

மின்மினி பூச்சியின் ஒளி
நிலவின் ஒளி
தெரு விளக்கு ஒளி
அனைத்தும் ஒளிர்ந்தாலும்
கள்ளப் பூனைக்கு
தேவை என்னவோ
இருட்டு தான்
அந்த இருட்டிலும்
திருட்டு பார்வையில்
அக்கம் பக்கம் பார்த்து
கருவாடு வாசனை
நுகர்ந்து பதுங்கி
ஒதுங்குவது என்னவோ
அந்த மூலை
வீட்டிற்குள் தான்...!!

ந க துறைவன்


Tuesday 28 June 2022

தும்பி ( கவிதை )

கவிதை
தும்பி

நானொரு தும்பி
மேகமூட்டமான வெளியில்
அங்கும் இங்குமாய் பறந்து
திரிந்து அலைகிறேன்
அந்த நந்தியாவட்டை பூவின்
மீது அமர்ந்து எழுகிறேன்
பூ பறிக்க வந்த சிறுவன்
என்னைப் பிடிக்க முயற்சிக்கிறான்
அவன் கைகளில் அகப்படாமல்
போக்குக் காட்டிபறக்கிறேன்
மேலும் கீழுமாய் எதிரே வந்த
இன்னொரு தும்பி
என்ன பிரச்சினை என்று
விசாரித்தது
பிரச்சினை ஏதுமில்லை
அந்த சிறுவனோடு கொஞ்சநேரம்
விளையாட்டு விட்டு
வரலாமென்று ஆசை
அதான் விளையாடிய களைப்பு
கருத்து வந்த மேகம் சில மணித்துளிகளில்
தூறல் போடத் துவங்கியது
வேகமாய் பறந்து போன தும்பி
எங்கு போய் ஒதுங்கியது என்று
தெரியவில்லை
சிறுவனுக்கும் எனக்கும்...!!

ந க துறைவன்.


Saturday 25 June 2022

Friday 24 June 2022

பால் ( கவிதை )

கவிதை
பால்

அவள் அறியாமலேயே சுரந்தது
ஜாக்கெட் முழுமையும் ஈரம்
முலை நுனியில் பால்.

She unknowingly exploited
The jacket is completely wet
Milk at the tip of the breast.

Thuraivan NG


Wednesday 22 June 2022

உயரம் ( ஹைக்கூ )

ஹைக்கூ கவிதை
உயரம்

எனக்கு குள்ளன் என்று பெயர்
அருகம்புல் அறியுமோ?
பனை மரத்தின் உயரம்.

Name me dwarf
Do you know the neighborhood
The height of the palm tree.

Thuraivan NG


Monday 20 June 2022

குரு ( ஹைக்கூ கவிதைகள்

குரு
ஹைக்கூ கவிதைகள்

1.
புத்தன் சின்முத்திரையில்
விரல் நுனியில் ஒளிரும்
பௌர்ணமி நிலவு.
2.
குருவைப் பற்றி
நினைக்காதவனுக்குள் தான்
எப்பொழுதும் இருக்கிறார் குரு.
3.
பெயர் அற்றவன் நான்
பிரபஞ்சம் எனது சொத்து
கையிருப்பு ஏதுமில்லை எனக்கு.

ந க துறைவன்.


Saturday 18 June 2022

வாழ்த்துக்கள்

தந்தையர் தினம்
நல்வாழ்த்துகள்
ந க துறைவன்


குரு ( ஹைக்கூ கவிதைகள் )

குரு
ஹைக்கூ கவிதைகள்

1.
சீடன் உறவு துறந்தான்
பக்தன் காதல் துறந்தான்
எதையும் துறக்காமல் குரு.
2
எங்கெங்கோ அலைந்து
மனம் சோர்ந்து போனான்
குருவைத் தேடிய சீடன்.
3.
பூனைக்கு குருவின் மீது பாசம்
அருகில் அமர்ந்து தினமும்
கற்கிறது ஜென்.
4.
பௌர்ணமி கவிதை வாசித்தாள்
கேட்டு சிரித்தது காற்று
சிலிர்த்தது வெட்கத்தில் நிலா.
5.
பௌர்ணமி தோறும் அலைந்து
காணாமல் கூடு திரும்பியது
புத்தனைத் தேடிய புறா.

ந க துறைவன் வேலூர்.


Friday 17 June 2022

செம்பருத்தி பூ ( கவிதை )

கவிதை
செம்பருத்தி பூ

மருத்துவமனை
உள் நோயாளியின்
சன்னலுக்கு வெளியே
அழகாய் பூத்து
அசைந்தாடி சிரிக்கிறது
செம்பருத்தி பூ

அவள் ரசிக்கிறாள்
அதன்
அழகை மௌனமாய்
நோய் மறந்து
மெய் மறந்து
சில நிமிடம்...

ந க துறைவன்.


Saturday 21 May 2022

கிளிஞ்சல் ( கவிதை )

கவிதை
கிளிஞ்சல்


இந்த வயதிலும்
ஆசை ஆசையாய்
பார்த்து ரசிக்கிறது மனம்
சிறுவயதில் கிளிஞ்சல்கள்
பொறுக்கிய நினைவலைகள்
மீண்டுமொரு முறை
அதன் மேலிருக்கும் கோடுகள்
ஓம் வடிவமைப்பு
உள்ளிருந்து எழும் ஓசை ரீங்காரம் செய்கிறது என்னுள்
அதைச் சேகரித்து வைத்து
கொஞ்சி மகிழ்ந்த நாள்கள்
மறக்க முடியாத அனுபவம்
இன்றும் வீட்டின் வாசலில்
அலங்காரத் தோரணமாய்
தொங்குகிறது
வண்ணக் கிளிஞ்சல் மாலை.

ந க துறைவன்.


கடவுள் ( மேற்கோள் )

மேற்கோள்
கடவுள்


Sunday 15 May 2022

பிறப்பு ( ஹைக்கூ )

ஹைக்கூ
பிறப்பு

பிறப்பு மகிழ்ச்சியானது
இறப்பும் ஆனந்தமானது தான்
கூடி அழுவதற்காக அல்ல.

Birth is happy
Death is bliss
Not to gather and cry.

Thuraivan NG


டீ மாதிரி ( மேற்கோள் )

மேற்கோள்
டீ மாதிரி


Sunday 8 May 2022

சரக்கொன்றை ( சிறுவர் பாடல் )

சிறுவர் பாடல்
சரக்கொன்றை


மஞ்சள் வண்ணப் பூக்கள்
மணங் கவரும் பூக்கள்
சரஞ்சரமாய் பூத்துக் குலுங்கும்
சரக்கொன்றை பூக்கள்.

தரையில் உதிர்ந்தப் பூக்கள்
தங்க நிறக் குவியல்
மரத்தைச் சுற்றி மண்ணில்
சூரியனுக்குப் பூப் படையல்.

கோயில் வளாக மூலையில்
தலவிருட்சமாய்த் திகழும்
பக்தர் கூட்டம் வலம் வந்து
கொன்றை மலரைப் புகழும்.

சக்தி சிவன் கழுத்திலே
பூமாலை யாகத் தொங்கும்
அழகு திருமேனி பார்த்து
அனைவர் கைகள் வணங்கும்.

போர் புரிந்த வீரன் கழுத்தில்
அலங்கரிக்கும் வெற்றி மாலை
சங்க இலக்கிய நூல்களில்
புலவர்கள் பாடினர் பாமாலை.

வசந்த காலப் பருவத்தை
வரவேற்கும் பொன் மனம்
சித்திரை மாதம் பூபூத்து
வாழ்வில் வீசும் நறுமணம்.

ந க துறைவன் வேலூர்.


Friday 29 April 2022

Tea Time / டீ டைம் ( சென்ரியு )

சென்ரியு கவிதைகள்
Tea Time /டீ டைம்.
ந க துறைவன்.

16.
நாலு டீ வாங்கினாள்
கட்டிக் கொடுத்தார்
இலவசமாக சர்க்கரை.

17.
பரபரப்பான செய்திகள் வாசிக்க
டீக்கடையில் காத்திருக்கிறார்கள்
கிராமத்து மூத்தக் குடிமக்கள்.

18.
அவனுக்கு ரொம்ப பிடித்தது
மாஸ்டரிடம் ஆர்டர் செய்தான்
மலாய் போட்ட டீ.

19.
டீக்கடை வெளிவாசலில்
சுடச்சுட வேகிறது வாணாலில்
வாழைக்காய் பஜ்ஜி.

20.
மன்றத்தில் பொதுக்குழு கூட்டம்
டீ வடை பகிர்ந்தான் பையன்
சிரித்த முகத்துடன்.

ந க துறைவன்.


Monday 25 April 2022

மரணம் ( ஹைக்கூ )

எதைச் சாப்பிட்டிருக்கும்?
செடியின் கீழ்
இறந்த பட்டாம்பூச்சி.

What would you have eaten?
Dead butterfly
Under the plant.

Thuraivan NG


Friday 22 April 2022

Tea Time / டீ டைம் ( கவிதைகள் )

Tea Time / டீ டைம்
ந க துறைவன்.


11.
ஒவ்வொரு மனிதனின்
ருசி உணர்வின் வெளிப்பாடு
லைட் ஸ்டாங்க் டீ.
12.
அனைத்தும் ஏற்றி முடித்தனர்
களைப்பு நீங்க டீ குடித்தனர்
புறப்பட்டது தேங்காய் லாரி.
13.
செடிகளுக்கு உரம்
தூக்கி சென்றாள்
டீத்தூள் கழிவு வாளி.
14.
கடன் கேட்டதால் தகராறு
கெடு விதித்து மீண்டும்
வாங்கிக் குடித்தார் டீ.
15.
டீக்கடை வாசலில்
காத்திருக்கிறது நாளெல்லாம்
பொறைக்காக நாய்.

ந க துறைவன்


Wednesday 20 April 2022

Tea Time/ டீ டைம் ( சென்ரியு )

Tea Time / டீ டைம்
சென்ரியு கவிதைகள்
ந க துறைவன்.

6.

டீக்கடைகளில் வாழ்கின்றன
மக்கள் ஒற்றுமை பலம்
இந்தியா கிராமங்களின் ஆன்மா.

7.

பஸ் வரும் நேரம் கேட்டறிந்தார்
ஊர் போய் சேர்வதற்கு
டீ குடித்த வெளியூர்க்காரர்.

8.

மூன்று டீ சொன்னார்
நின்று கொண்டே பேசினார்கள்
காதல் தகராறு.

9.

அப்பா சொல் கேட்கும் மகன்
விரும்பி குடிக்கிறான்
சைனா டீ.

10.

டீக்கடைக்குள் வந்து நுழைந்தவரால்
சட்டென நிறுத்திக் கொண்டனர்
ரகசியப் பேச்சு.

ந க துறைவன் வேலூர்.
ஃஃஃ


Tuesday 19 April 2022

மழை ( ஹைக்கூ )

இரவு பலத்த மழை
ஜன்னல் வழியே சாரல்
அறைக்குள் பூனை முனகல்.

Heavy rain at night
Scrolling through the window
Cat morning into the room.


Thuraivan NG.