Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Sunday 31 December 2017

மனமற்ற...

மனமற்ற வெளியில்
எந்தச் செய்திகளும் அறியாது?
கடந்து போகிறது பறவை.


மனமற்ற நிலை


சிந்தனைகள்.

ஆன்டன் செக்கோவ்
சிந்தனைகள்.

மகிழ்ச்சியாக இருக்கும்போது
வெயிலா அல்லது குளிரா என்பதையெல்லாம் மனம் கவனிப்பதில்லை.
*
மனிதன் என்பவன்
அவனது நம்பிக்கையைப் பொறுத்தவன்.
*
ஞானம்... வயதினால் வருவதல்ல, கல்வி மற்றும் கற்றலின் மூலமாக வருவது.

தொகுப்பு: ந க துறைவன்.


ஆன்டன் செக்கோவ் சிந்தனை கள்


வாழ்த்துக்கள்

புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Saturday 30 December 2017

போய் வா...!!

2017 - ஆண்டு

மறப்பதற்கும்
மறக்காமல்
இருப்பதற்குமான
ஏராளமான செய்திகள்
நம்மிடையே
விட்டுச் செல்கிறது
விடை கொடுப்போம்.

பை...பை...

ந க துறைவன்.


விடை தருவோம்.


Sunday 24 December 2017

Thursday 21 December 2017

நெய்யும் உண்மையும்!

சூஃபி கதை.

நெய்யும் உண்மையும்!

உழைப்பிற்கு எப்போதும் மதிப்பு கிடைக்கும். உழைத்து வாழ்ந்தால்தான் உண்மையான மகிழ்ச்சி கிட்டும் என்று உழைப்பின் பெருமையை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார் சூஃபி என்கிற ஞானி.
அங்கிருந்த மூன்று இளைஞர்கள் அதற்கு மாறாக, உழைத்தால் அதற்கானப் பலனை எதிர்ப்பார்க்க வேண்டும். எனவே உழைக்காமல் இருப்பது சிறந்தது என நினைத்தனர். எவரையும் உணர்ந்து கொண்டு அவருக்கு அறிவுரை வழங்குவார் சூஃபி.
இந்த மூன்று இளைஞர்களின உணர்வையும் உணர்ந்து கொண்ட ஞானி, அவர்களை, சந்தைக்கு அழைத்து சென்றார்.
அங்கு ஒரு கடைக்குச் சென்று, " பால் எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்"என்றார் ஞானி.
காலையில் கறந்தால் மதியத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும் என்றார் கடைக்காரர்.
"இந்த நெய் எத்தனை நாட்கள் கெடாமல் இருக்கும்" என்றார் ஞானி.
ஒரு மாதம் என்றார் கடைக்காரர்.
" பால் என்ன விலை, நெய் என்ன விலை" என்றார் ஞானி.
" பால் பத்து ரூபாய், நெய் நூற்றைம்பது ரூபாய்" என்றார் கடைக்காரர்.
இந்த நெய்யை எவ்வாறு தயாரிக்கிறீர்கள் என்றார் ஞானி.
பாலைக் காய்ச்சி தயிராக்கி அதைக் கடைந்து வெண்ணெய் எடுத்து அதைக் காய்ச்சியே இந்த நெய் தயாரிக்கப்படுகிறது என்றார் கடைக்காரர்.
பின் ஞானி இளைஞர்களைப் பார்த்து, " நீங்கள் உழைக்காமல் இருந்தால் பாலின் கதிதான், கடும் உழைப்பு இருந்தால் நெய்யின் மதிப்பு கிடைக்கும்" என்றார் ஞானி.
இதைக் கேட்ட அந்த மூன்று இளைஞர்களும், இனி உழைத்து வாழ்வது என்று முடிவெடுத்தார்கள்.

ஆதாரம்: சூஃபி கதைகள் -எடையூர் சிவமதி - பக்கம் -2,3.
தகவல்: ந க துறைவன்.


சூஃபி கதை.


Wednesday 20 December 2017

பலூன்...!!

ஹைக்கூ

காற்றடைத்தப் பலூன்
வானில் மிதக்கிறது, என்
மூச்சுக் காற்று உள்ளே வெளியே.

ந க துறைவன்.


காற்றில் மிதக்கும் பலூன்.


Tuesday 19 December 2017

அரூப புத்தன்...!!

ஹைக்கூ

போதி சுள்ளிகள் தீமூட்டம்
எரிகிறான் அரூப புத்தன்
குளிர் காய்கிறார்கள் கூட்டமாய்...

ந க துறைவன்.


மார்கழி குளிர்.....


Sunday 17 December 2017

நிழல்...!!

நிழல்.

இன்னும் யாருக்கும்
தெரியவில்லை
அவளுக்கு மட்டும்
தெரிந்தது, அது
என்னுள்
புதைந்திருக்கும்
வெளி ரகசியம்.
+
வெட்டி எரித்தார்கள்
சாம்பல் கனன்று உணர்வாய்
எழுகிறது காதல் தீ.
+
வேப்பம் மரங்கள்
வெளியில் நிழல் தரும்
அம்மாவின்
நிழல் என்றும்
அகத்திற்கு
சுகம் தரும்
கற்பக விருட்சம்.
+
மேகங்கள் பயணம் தொலைதூரம்
ஊர் கடந்து போகின்றன
சொட்டு மழைத்துளிகள்
பெய்யாமல்...
+
வெட்டவெளியெங்கும்
பசுமை நிறைந்த மரங்கள்
பறவைகள் பறத்தல்
அகமனதில் பேரிசைச்சல்.
+
கவிதைகளில்
காதல் வாடை
குளிரும் போர்வையும்
பாராட்டு வாடை
காற்று நெகிழ்ந்தது.

ந க துறைவன்.


கவிதைகள்


Saturday 16 December 2017

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

விழிப்புணர்வு இழந்து
கூடை நிறைய பூக்கள்
உள்ளே நெளிகிறது ஓர்புழு.

ந க துறைவன்.


பூக்கள் பற்றிய கவிதை


லிங்கப்பனி...!!

மார்கழி கவிதை


Friday 15 December 2017

நகைச்சுவை

வாசித்ததில் வசீகரித்தது.

மனைவியைத் திருடிச் செல்ல ஆள் தேவை.
இப்படியொரு நகைச்சுவையா என ஆச்சரியப் பட வைத்தது வைக்கம் முகம்மது பஷீர், இச்சிறுகதை.

" குரு, என் வீட்டுக்கு சமையல்காரனாக வருகிறீர்களா?
குரு, ஏதோ முக்கிய விஷயம் தான்."
"என்ன லாபம்?"
" என் மனைவியைத் திருடிச் செல்லலாம்."
இந்த நகைச்சுவை வரிகள் படித்து கதையை தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். முழுவதும் படித்து சிரித்து மகிழுங்கள்.

ஆதாரம்: வைக்கம் முகம்மது பஷீர் - அனல் ஹக் - சிறுகதை தொகுப்பு - பக்கம் - 211.
தகவல்: ந க துறைவன்.
* Dec 16, 2017 12:21:50 PM


பஷீர் சிறுகதை


மார்கழி

மார்கழி

விடியல் பனிப் பொழிவு
நீராடும் குருவிகள்
வீதியில் திருப்பாவை ஓசை.

ந க துறைவன்.


மார்கழி பனி மாதம்


Wednesday 13 December 2017

சில கணங்களில்...!!

சில கணங்களில்...
+
மௌனமாய் இருந்தவளை
உசுப்பி விட்டு போனான்
கணவன்
அவள்
சிணுங்கல
சிறிது நேரத்தில்
மறைந்தது.
+
புருவங்கள் மத்தியில்
ஸ்டிக்கர் பொட்டாய்
நெற்றியில்
வைத்திருக்கிறாள்
என்னை
நினைவு கூர்ந்து...
+
வேகமாக கதவைச்
சாத்தினாள்
எதற்கு என்று
பார்த்தேன்
தெருவைக்
கடந்து போகிறான்
எதிர் வீட்டு வாலிபன்.
+
நிதானமாக
பாதையில் நடந்தாள்
வேகமாய்
ஸ்கூட்டரில் வந்தவன்
இடித்து விட்டு
போகிறான்.
+
கவுச்சி வாடை
அடிக்கிறது
மீன்காரியின்
பேச்சு.

ந க துறைவன்.


குறுங்கவிதைகள்.


Tuesday 12 December 2017

கனிந்த சாறு...!!

கனிந்த சாறு.

1.
சுரக்கும் தேன்
உமிழ்நீர்
கனிந்த சாறு
போதை என்று
கூறு.
2.
வண்ணத்துப்பூச்சிகள்
வழி தவறி
போவதில்லை
மனிதன் தான்
பல நேரங்களில்
வழி தவறி
போகின்றான்.
3.
சோர்வோடு சூரியன்
சாய்கிறான் மேற்கில்
மாலை
மஞ்சள் வெயில்
அழகு.
4.
எங்கிருந்தோ
தூண்டுதல் வருகிறது
இங்கிருப்பவர்கள்
ஆடுகிறார்கள்.
5.
அவரவர்கள்
நமச்சலை
அவரவர்களே
சொறிந்து
கொள்கிறார்கள்.

ந க துறைவன்.


குறுங்கவிதைகள்.


Friday 8 December 2017

பதிவுகள்...!!

தத்துபித்து
*
பதிவுகள்.

மண்ணின் நிறம்
நிரந்தரமானது
அடிக்கடி
மாறக்கூடியது
மனதின் நிறம்.
+
இக்கணம்
புத்த நிலையில்
இருக்கிறது மனம்.
+
காலப் பதிவுகள்
மறைக்கப் படுகின்றன
புதிய பதிவுகள் திருத்தப்படுகின்றன.
+
என்னை எப்போதும்
வசப்படுத்தி வைக்கிறாள்
இசை.
+
பனிக்குளிரில் பூச்செடிகள்
போர்வையில் மனிதர்கள்
கார்த்திகை குளிர்.

ந க துறைவன்.


பதிவுகள்


Thursday 7 December 2017

சாயல்...!!

சாயல்

யாருடைய சாயல்
நான்
அம்மா அப்பா
தாத்தா பாட்டி என 
வேறு
யாருடைய சாயல்
பிறந்த நாள் தொடங்கி
இன்று நாள் வரை
சாயல்
அடையாளம் வைத்து தான்
என்னை ஊர் ஜனங்கள்
ஊர்ஜிதப்பபடுத்தி
உறவாடுகிறார்கள்
சாயல் மரபணுக்கள்
சார்ந்தது என்றாலும்
யாருடைய சாயல் என்று
எனக்கு இன்னும்
புலப்படவில்லை...
கடைசியாக
இறந்த போது பெரியப்பா
சொன்னார்.
" டேய், நீ உன் பாட்டி
முகச் சாயலை அப்படியே
கொண்டிருக்கேன்னு..."

ந க துறைவன்.


யாருடைய சாயல்...


Wednesday 6 December 2017

பார்த்தும் பாராமல்...!!

பார்த்தாள்
பார்த்த பின்
பார்க்காதது போல்
பாதையில் நடந்தாள்
தலைகுனிந்து சிரித்து...!!

ந க துறைவன்.


பாதையில் நடந்தவள்


Tuesday 5 December 2017

இருப்பு

இருப்பு

இருப்பது...
இருக்கிறது இங்கே...
இருக்கும் எங்கும்...

இருப்பது இருப்பாக...
இருக்கிறது இக்கணம்...
இருக்கும் என்றுமாய்...

ந க துறைவன்.
+


இருப்பதால் இருப்பு


விண்ணோக்கி...

Haiku - Tamil / English

சிறுவன் ஊதினான்
விண்ணில் பறந்தது
நுரைப் பூக்கள்.

He flew in the sky
Boy blew
foam flowers.


விண்ணோக்கி...


Monday 4 December 2017

புல்வெளி...!!

புல்வெளி

புல்வெளியில்
காதலர்கள் சிரிப்பு
புரிதலற்ற பேச்சுக்கள்
புரியாமல் தவிக்கும்
குருவிகள்
வேடிக்கை பார்க்கும்
வண்ணத்துப்பூச்சிகள்
வெட்கத்தில் தலை குனிந்தாள்
வேறு பக்கத்தில் அவனை பார்த்தான்
வேர்கடலை விற்பவன்
புன்னகையோடு
நகர்கிறான் மெல்ல...

ந க துறைவன்.


பூங்காவில் காதலர்கள்


அன்பு...

அன்பு அனுபவித்தல்.


ஏகாந்த மௌனம்...!!

ஏகாந்த மௌனம்.

ஈரப்பதமான இரவின்
குளிர்ந்தக் காற்று வீசுகிறது
மெல்லிய புன்னகையில்
ஆழ்ந்த உணர்வுகள்
கண்களால் பரிபாஷையில்
பகிர்ந்து கொள்கின்றன.
அங்கே நிலவுவதோ
ஏகாந்த மௌனம்.

ந க துறைவன்.


ஏகாந்த மௌனம்...


செகண்ட் ஹாண்ட்...!!

செகண்ட் ஹாண்ட்.

" சமீபத்தில் உங்களோட திருமணம் நடந்தது இல்லையா? "
"ஆமா" 
" அந்தப் பொண்ணை ஏற்கனவே
தெரியுமா?"
" தெரியாது"
" அவ எழுதிய நிறைய காதல் கடிதங்கள்
ஒரு ஆள்கிட்ட இருக்கு."
" காதல் கடித வியாபாரியாக இருக்கும்!.
எதுவாக இருந்தாலும், அந்த விஷயத்தை சாரதா ஏற்கனவே எங்கிட்ட சொல்லிட்டா".
" திருமணத்து முன்னால குழந்தை
பெத்த விவரம்?"
"எல்லாம் தான்."
" தானொரு செகண்ட் ஹாண்டுங்குறதைச் சொல்லிட்டா இல்லையா?" 
லட்சியக் கவிஞன் சிரித்தான்.
கோபிநாதன் புன்சிரிப்புடன்.
" அதையும் சொன்னாள்" என்று சொல்லி விட்டு, "அவளை இந்த 
நிலைமைக்கு ஆளாக்கிய கவிஞனோட
பெயரையும் சொன்னாள்" என்றான்.

ஆதாரம்: வைக்கம் முகம்மது பஷீர் - அனல் ஹக் -   
சிறுகதை தொகுப்பிலிருந்து - பக்கம்- 32-33.
தகவல்: ந க துறைவன்.
*


சிறுகதையிலிருந்து...


செகண்ட் ஹாணாட்...!!

செகண்ட் ஹாண்ட்.

" சமீபத்தில் உங்களோட திருமணம் நடந்தது இல்லையா? "
"ஆமா" 
" அந்தப் பொண்ணை ஏற்கனவே
தெரியுமா?"
" தெரியாது"
" அவ எழுதிய நிறைய காதல் கடிதங்கள்
ஒரு ஆள்கிட்ட இருக்கு."
" காதல் கடித வியாபாரியாக இருக்கும்!.
எதுவாக இருந்தாலும், அந்த விஷயத்தை சாரதா ஏற்கனவே எங்கிட்ட சொல்லிட்டா".
" திருமணத்து முன்னால குழந்தை
பெத்த விவரம்?"
"எல்லாம் தான்."
" தானொரு செகண்ட் ஹாண்டுங்குறதைச் சொல்லிட்டா இல்லையா?" 
லட்சியக் கவிஞன் சிரித்தான்.
கோபிநாதன் புன்சிரிப்புடன்.
" அதையும் சொன்னாள்" என்று சொல்லி விட்டு, "அவளை இந்த 
நிலைமைக்கு ஆளாக்கிய கவிஞனோட
பெயரையும் சொன்னாள்" என்றான்.

ஆதாரம்: வைக்கம் முகம்மது பஷீர் - அனல் ஹக் -   
சிறுகதை தொகுப்பிலிருந்து - பக்கம்- 32-33.
தகவல்: ந க துறைவன்.
*


சிறுகதையிலிருந்து...


அங்கே சிரிப்பவர்கள்...?

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்?


Sunday 3 December 2017

அந்நியன்

அந்நியன்.

நானே
உங்களுக்கு
அந்நியன்
நீங்களே
உங்களுக்கு
அந்நியர்கள்


அந்நியமாதல்...


Friday 1 December 2017

மனம்

மனம்

நல்ல மனம் என்றும், கெட்ட மனம் என்றும் இரண்டு மனங்களில்லை. மனம் ஒன்றே.

பகவான் ஶ்ரீரமண மகரிஷி.


மனம்


வாழ்த்துக்கள்

கார்த்திகை தீபம் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே...

ந க துறைவன்.