குழந்தைகள்
தனக்கு தேவையான ஆடைகளைத் தானே தேர்வு செய்துக் கொள்கின்றனர். அம்மாவோ அப்பாவோ தேர்வு
செய்யும் ஆடைகளை நிராகரிக்கவே செய்கின்றனர். அதற்காக அடம்பிடிக்கவும் செய்கின்றனர்.
குழந்தைகள் தனக்கான சுதந்திரத்தை உரிமையை விட்டுக் கொடுக்காமல் செயல்படுகின்றனர். இந்த
பிடிவாத குணம் நல்லதா? கெட்டதா? என்பதை தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
குழந்தைகளின் இப்பிடிவாதப் போக்கை விட்டுப் பிடித்து கவனித்து வரவேண்டும் என்கின்றனர்
குழந்தைகள் நல மருத்துவர்கள். இப்போக்கு எதிர்காலத்தில் பின்விளைவுகளை எற்படுத்தும்
என்றும் எச்சரிக்கின்றனர்.
மரத்தின்
நிழலில் வளர்ந்தது
கர்வமில்லாமல்
பாதுகாப்பாய்
நித்திய
கல்யாணி செடிகள்.
ந.க.துறைவன்.