*
கன்னங் கரிய காகமே!
கள்ளங் கருங் காகமே!
என்ன கார ணத்தினால்
எத்தித் திரிந்து
வாழ்கிறாய்?
சின்னஞ் சிறுவர்
ஆவலாய்
சீடை, முறுக்கு,
தேன் குழல்
தின்னும் போது
மெல்ல நீ
திருடிக் கொண்டு
போகிறாய்?
என்ன செயல் உன்
செயல்!
ஈனச் செயல் அல்லவோ?
தின்னும் பண்டம்
போனதால்
தேம்பிச் சிறுவர்
அழுகிறார்.
கன்னங் கரிய காகமே!
கள்ளங் கருங் காகமே!
உன்னைப் போன்ற
திருடர்கள்
உலகில் யாரும்
இல்லையே!
கறுத்த உடல் கொண்ட
நீ
கறுத்த மனசும்
கொண்டதால்,
வெறுத்து மக்கள்
உன்னையே
விரட்டி அடிக்
கின்றார்கள்!
கிருஷ்ணன் நம்பின்
குழந்தைப் பாடல்
ஆதாரம் ; கிருஷ்ணன்
நம்பி ஆக்கங்கள் – தொகுப்பு – பக்கம் – 330.
தகவல் ; ந.க.துறைவன்.
*