‘ஜட்ஸ் டக்கோலா’ – பூண்டு மருத்துவம்.
*
மருத்துவக் குணம் நிறைந்த பூண்டுகளை ஜப்பானியர்கள்
அதிக அளவில்
விரும்புகிறார்கள். ஒவ்வோர் ஆண்டும் சூலை
மாதம் பூண்டு விளைவிக்கப்படுகிறது. பூண்டுகளைப் பல விதங்களில் ஜப்பானியர்கள் பயன்படுத்திக்
கொள்கிறார்கள். பூண்டு ஐஸ்க்ரீம், பூண்டு பியர் எல்லாம் கொண்டு வந்தவர்கள் கடந்த மாதம்
பூண்டு கோலாவை அறிமுகம் செய்திருக்கிறார்கள். கோலாவில் பூண்டுகளை மிதக்க விட்டிருக்கிறார்கள்.
பூண்டுப் பிரியர்கள் கோலா குடிக்கும்போது பூண்டுகளை மென்று சாப்பிட்டுவிடலாம். பிடிக்காதவர்கள்
கோலாவை மட்டும் குடித்து விடலாம்.
‘ஜட்ஸ் டக்கோலா’ என்ற பெயரில் வெளிவந்திருக்கும்
பூண்டு கோலாவுக்கு ஜப்பானியர்கள் வரவேற்பு அளித்துவிட்டனர்.
ஆதாரம் :- தி இந்து – நாளிதழ் – சனி –
07-02-2015.
தகவல் :- ந.க. துறைவன்.
*