Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Monday 31 October 2016

ஒரு வரிக் கவிதைகள்.





*
பருவத்தில் வந்து பொழிகின்றாள் அன்பு மழை.
*
மழையில் நனைந்தவள் நெஞ்சமெல்லாம் ஈரம்.
*
மகிழ்ச்சியாக இருக்கிறாள் மனசு குளிர்ந்தவள்

ந.க.து்றைவன்.
*

ஹைக்கூ விமர்சனம்...!!



தஞ்சை அரசூரியிலிருந்து நண்பர் விச்சுவின் அன்பு கடிதம்.

ந.விச்வநாதன்.                       அரசூர், அம்மன்பேட்டை,
                                     தஞ்சாவூர் – 613 205.
                                     தேதி : 12- 02- 2012.


அன்பு நண்பருக்கு நலமே விளைக. வணக்கம்

தாங்கள் அன்புடன் அனுப்பிய “ சொல் கொண்ட மேகங்கள் ” நூல் பெற்றேன். நன்றி. சிறப்பான முயற்சி. வாழ்த்துக்கள். எல்லா கட்டுரைகளையும் வாசித்து முடித்த பிறகு மனதுக்கு திருப்தியாக இருந்தது.
தற்காலத்தில் ஹைக்கூ என்ற பெயரில் ஏராளமாய் சத்தற்ற விஷயங்களாக வந்து கொண்டிருக்கின்றன. ஹைக்கூ பற்றிய புரிதல் மிகக் குறைவாகவே இருக்கிறது. அசல் ஹைக்கூவிற்கு அருகில் கூட வரத்தக்கவையாய் இல்லை. ஆரவாரம் மிகவாகவே இருக்கிறது.

சொல் கொண்ட மேகங்கள் வழி நீங்கள் உண்மையான அக்கரையோடு ஹைக்கூ தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர முடிந்தது. ‘ எந்த முடிவும் எட்டாமல் / முற்றுப் பெற்றது / மூவருக்குள் நடந்த விவாதம் ‘ என்பது அருமைதான். இதுதான் சரியான பார்வை.

ஹைக்கூ குறித்த உங்கள் பார்வை தெளிவாகவே இருக்கிறது. ஜென் குறித்த உங்கள் அனுபவங்கள் மிகச் சிறப்பானவை. ஜென் புரிதல் என்பது ஹைக்கூவைப் புரிந்து கொள்ளல்தான். கீழைநாடுகளின் கலாச்சாரத்தன்மையும் தமிழகச் சூழலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பருவகாலங்கள் வாழ்வியல் நெறிகளும் கூடத்தான். ஆயினும் பலருக்கு ஹை்கூ சித்திப்பதில்லை. உங்களுக்கு அது வந்திருக்கிறது. என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் நிறைய எழுதுங்கள். உங்களால் முடியும்.

அன்பாதவனின் பார்வை வித்தியாசமானது. சிறுவர்களுக்கான இலக்கியமே அருகிப் போன காலத்தில் அதில் நீங்கள் முனைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

நான் ஒரு சரியான கிராமத்தில் வசிக்கிறேன். புத்தகம் தேடிப் போக நீண்ட பயணம் தேவைப்படுகிறது. எனவே கிடைக்கும் புத்தகங்களிலேயே என் கவனம் செல்கிறது. புதிய வரவுகள் எனக்கு தாமதமாகவே தெரிகின்றன. தொடர்ந்து வாசிக்க முடியாதச் சூழல். நிறைய ஹைக்கூ நூல்கள் நான் வாசிக்கவில்லை. இப்போது விரிவான ஒரு கட்டுரை ஜென் குறித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எனவே புத்தகங்களைத் தேடிப் போக வேண்டிய அவசியம். என் முள்ளில் அமரும் பனித்துளிகள் குறித்த பார்வை நன்றாகவே இருக்கிறது. நன்றி.
மீண்டும் வருவேன்.

நட்புடன்

நா.விச்வநாதன்.

*

Sunday 30 October 2016

சிரிப்பு மத்தாப்பூ

மைக்ரோ கதை.



அவள் கொடுத்த அதிரசத்தைத் தின்றவன் சொன்னான்.
” என்ன மென்மையா ருசியாயிருக்கு…? ” என்றான்.
அவள் கேட்டாள்.
அது என்ன அதிரசம் சொல்லுங்க…?
அவன் கொஞ்சம் முழித்தான்.
தெரியவில்லை? என்று சொல்லத் தயங்கினான்.
பிறகு, அவளே சொன்னாள்
“ அது அரிசி அதிரசம் இல்லே. கம்பு அதிரசம் ” என்றாள்.
“ அட, ஏதோவொன்னு ரெண்டுமே மென்மையா தானே இருக்கும் ” என்று சமாளித்தான்.
அது அரிசி அதிரசமா? கம்பு அதிரசமா? என்று கண்டுபிடிக்கக் கூட தெரியலே…? என்று கேலி செய்தாள்.
அவன் வெட்கப்பட்டான்.
அவளும் சிரித்தாள். அவனும் சிரித்தான்.
சிரிப்பு மத்தாப்பூ ஒளி வீசியது. 

Saturday 29 October 2016

அக்காவி...!!

மைக்ரோ கதை.


“ டேய், மாமாவை ஏன்டா இப்படிக் கலாய்க்கிறே,
அவரு ரொம்ப அப்பாவிடா ” என்றாள் அக்கா.
“ இவரா அப்பாவி. இல்லெக்கா. இவரு
அக்காவி ” என்றான் தம்பி.
மூவரும் சிரித்தார்கள். அருகில் தின்பதற்கு
வைத்திருந்த முறுக்கு சிரிப்போடு நொறுங்கியது.

*

ஸ்நானம் ஆச்சா...!!

மைக்ரோ கதை.

  
ஸ்நானம் ஆச்சா, நீ நோன்பு
இருக்கணும்மா என்றார் அப்பா.
“ கங்கா இல்லை ”என்றாள்.
“ என்னவாச்சு ” என்றார்
சொல்ல வெட்கப்பட்டாள்.
அம்மா வந்து சொன்னாள்.
“ அவ மாசமாயிருக்கா ” என்றாள்.
“ இது வேற செலவா ” என்று
தலைகுனிந்தபடி பேசாமல்
மௌமாக உள்ளே போனார்.

*

சிரிக்காமல் சுடரும் மத்தாப்பூக்கள்...!!

மைக்ரோ கதை.



மாப்பிள்ளை பொண்டாட்டி காதிலே சொன்னார்
பொண்ணு அப்பா காதிலே போட்டாள்.
புருஷன் மனைவி காதிலே போட்டு கத்தினார்
“ எல்லாம் தலைஎழுத்து போங்க வாங்கி கொடுத்து
தொலைங்க ” என்றாள் தாய்.
உள்ளே இடிச்சத்தம். வெளியே வெடிசத்தம்.
சிரிக்காமல் சுடர்கிறது மத்தாப்பூக்கள்.
ந.க.துறைவன்.

*.

தீபாவ ( லி ) ளி...!!




1. சேதாரம் செய்கூலி இல்லாமல் தங்கம்
2. ஒரு பட்டுப்புடவை எடுத்தால் இரண்டு பட்டுப்புடவை இலவசம்.
3. ஆடைகள் எது எடுத்தாலும் அமோக தள்ளுடி
4. இனிப்பு காரம் சிறப்பு பாக்கெட் சலுகை விலை.
5. அதிரசம், முறுக்கு, சீடை, எள்ளடை நொறுக்குத் தீனிகள் பாக்கெட்டுகள்        
  சலுகை விலை. 
6. பழங்களின் விலை பத்து நாட்களுக்கு முன்பே ஏறிவிட்டது மக்களின்
  புலம்பல். 
7. காய்கறிகள் விலைகள் கிடுகிடு உயர்வு.
8. தீபாவளி விருந்துக்கு வரும் மாப்பிள்ளை திணறடிக்கும் பட்சணங்கள்.
9. பட்டாசுக்காக தவணையில் கட்டிய பணத்திற்கு ஏராளமான
  இலவசப் பொருட்கள்.
10. அனேகமாக இந்த வருடம் தீபாவளி  மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்
   என்று ஊடகங்களுக்கு பேட்டி தருகிறார்கள் நட்சத்திரங்கள்.
11. தலைவர்களின் தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரை.   
12. உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
ந.க.துறைவன்.

*

இயற்கை ஹைகூ


இயற்கை ஹைகூ


Friday 28 October 2016

நல்வாழ்த்துக்கள்

வாழ்க்கை தீபம் போன்று சுடர் விட்டு பிரகாசிக்கட்டும்.

ந. க. துறைவன்.


பரிமாற்றம்...!! ( ஹைபுன் )



தமிழர்கள் கொண்டாடும் விழாக்களில் பெரும்பான்மையானது, தமிழர் கலாச்சாரத்திற்குப் புறம்பான அன்னியர்களின் கலாச்சார விழாக்களாகத் தானிருக்கிறது. அதையே தன்னுடைய விழாவாகக் கருதி பின்பற்றி கொண்டாடி மகிழ்கிறார்கள். நவீன மேலைநாகரீகம். இந்திய மொழி பேசும் மக்களின் கலாச்சாரப் பண்பாடுகள் புரிந்துக் கொள்ளாமை. மதத் தத்துவங்கள் சொல்லும் ஆசார நியதி நியமங்கள் என பலவற்றில் சிக்கிக் கொண்டமையே இதற்கு காரணம் என்றே சொல்லலாம். கொண்டாடப்படும் விழாக்கள் எல்லாம் தற்போது மதவிழாக்களாக மாறி வன்நெறி கலாச்சாரத் திருவிழாக்களாக மாறிவிட்டன.
கலாச்சாரத்தின் வெளிப்பாடு
அன்பு பரிமாற்றம் உறவின் நேசம்
நல்லிணக்கத்தின் விழிப்புணர்வு.

*

Thursday 27 October 2016

வெடிப்பு...!!

ஒரு வரிக்கதை.

வெடிகள் வேண்டுமா? என்று கேட்டான் அவன்

அவள் வாயாலேயே வெடித்து தள்ளினாள்

இருவரும் மூலைக்கொருவராகச் சிதறிப் போனார்கள்.

*


Wednesday 26 October 2016

தீபா வ (லி ) ளி...!!



1.
செய்வதாக இருந்த வேலை தள்ளிப் போகிறது ஏதோவொரு வேலை
தற்சமயம் செய்ய வேண்டியதாகிறது.
2.
மகனுடன் பட்டாசு கடையில் அப்பா மகளும் நகை கடையில் அம்மா
வாங்கிக் கொடுத்து அழைத்து வருவதற்குள்
காசும் கரைகிறது. மூச்சும் இரைகிறது.
3.
குழந்தைகள் தனக்கு தேவையான ஆடைகளைத் தானே தேர்வு செய்துக் கொள்கின்றனர். அம்மா அப்பாவோ தேர்வு செய்யும் ஆடைகளை நிராகரிக்கவே செய்கின்றனர். அதற்காக அடம்பிடிக்கவும் செய்கின்றனர். குழந்தைகள் தனக்கான சுதந்திரத்தை உரிமையை விட்டுக் கொடுக்காமல் செயல்படுகின்றனர்.

*

Tuesday 25 October 2016

ஹைக்கூ


ஆடைகள் தேர்வு....!!




தீபாவளிக்கு துணியெடுக்க கடைகள் தேடிச் செல்லும் கூட்டம் எங்கும் தென்படுகின்றது. கடை வாசலில் சிப்பந்திகள் சிரித்த முகத்தோடு வரவேற்கிறார்கள். என்ன ரகம் எடுக்க வேண்டுமோ அங்கே அழைத்துச் சென்று காட்டுகிறார்கள். துணிகள் எடுத்து எடுத்து போடுகிறார்கள். தேர்வு செய்ய நேரம் கடக்கிறது. பின்னாலே நிற்பவர்கள் சத்தம் கேட்கிறது.
எடுத்தவர்கள் விலகுகி போகிறார்கள்.
எடுக்க வருபவர்கள் உள்நுழைகிறார்கள்
களைத்த உணர்வோடு சிப்பந்திகள்

Saturday 22 October 2016

ஆறுசுவை...!! ( கவிதை )



1.
உன் கிளர்த்தலில்
மலர்ந்தது
நான்.
2.
எனது தனிமையை
வென்றாள்.
3.
உன் முந்தானை
அசைத்து காட்டுகிறது
பச்சை கொடி.
4.
உன் மூக்குத்தி
எனக்கு
சிக்னல் விளக்கு.
5.
மெட்டி அறியுமா?
உன்
கனிந்த வெட்கம்.
6.
பாமாவுக்கு
மாமாவைப் பிடிக்கும்.
ந.க.துறைவன்.

*

பரிசு...!! ( ஹைக்கூ )


Tuesday 18 October 2016

சோறு

ஒரு பிள்ளை பெத்தவனுக்கு
உரியிலே சோறு
நாலு பிள்ளை பெத்தவனுக்கு
நடுத்தெருவிலே சோறு.

பழமொழி சொன்னவர் :
திருமதி பூசணம்.


ஆசை

நிறைவேறாது  என்று
நினைத்த போது
எப்படியோ?
நிறைவேறியது
நிறைவேறாத ஆசை.

ந. க. துறைவன்.


Friday 14 October 2016

பீத்தல்

அம்மா வீடு வெள்ளிமலை
போயி பார்த்தா தொண்டிமலை.

பழமொழி சொன்னவர்:
திருமதி பூசணம்.