குட்டி கதை
பல்லி
அரண்மனைப் பல்லி தர்பார் மண்டபத்தின் மேற்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும். அவ்வூரிலிருந்த சாதாரண பல்லிகள் இந்த அரண்மனைப் பல்லிக்கு மரியாதை கொடுத்துத் தங்கள் சமூக நிகழ்ச்சிகளுக்கு அழைக்கும். ஆனால் இது என்றும் போகாது. ஒரு முறை சில பல்லிகள் அது ஏன் அரண்மனையை விட்டு வெளியே வருவதே கிடையாது என்று கேட்டன. அதற்கு அரண்மனைப் பல்லி, " மடையர்களே! இது கூடவா தெரியாது? நான் தானே தர்பார் மண்டபத்தின் மேற்பகுதி முழுவதையும் தாங்கிக் கொண்டிருக்கிறேன். நான் வெளியேறினால் மேற்பகுதி விழுந்து மண்டபம் சிதறிப் போகாதா" என்று காட்டமாகக் கேட்டது.
ஆதாரம்: ஓஷோ - அஷ்டாவக்ர மகாகீதை - பக்கம்- 96-97.
தகவல் : ந க துறைவன்.
Labels
Tuesday 31 July 2018
பல்லி
Tuesday 24 July 2018
மகிழ்ச்சி
சிலர் மகிழ்ச்சியாக
இருக்கிறார்கள்
சிலர் மகிழ்ச்சியே
இல்லாமல் இருக்கிறார்கள்
மகிழ்ச்சி
மனதில் எப்போதுதான்
மலரும்?
*
மலரும் புன்சிரிப்பு
உல்லாச மனம்
மேனி அலங்காரம்
வெளி அழகு
உள்ளே எப்பொழுதும்
சோக மயம்.
ந க துறைவன்.
மகிழ்ச்சியாக இருத்தல்
Monday 23 July 2018
ஆடிமாதம்
வேப்பிலை ஆடைகள் கட்டி
பிரகாரம் வலம் வந்தாள்
அவள் மீது எத்தனை பார்வைகள்?
*
ஆடிமாதம்
அம்மன் மாதம்
என்பது போய்
ஆடைகள் மாதம்
என்றாக்கி விட்டார்கள்.
ந க துறைவன்.
ஆடிமாதம்
ஆடிமாதம்
வேப்பிலை ஆடைகள் கட்டி
பிரகாரம் வலம் வந்தாள்
அவள் மீது எத்தனை பார்வைகள்?
*
ஆடிமாதம்
அம்மன் மாதம்
என்பது போய்
ஆடைகள் மாதம்
என்றாக்கி விட்டார்கள்.
ந க துறைவன்.
ஆடிமாதம்
சிறகுகள்
காய்ந்த இலைகளுக்கு
சிறகு முளைக்கின்றன
பலத்த காற்றின் போது.
*
சருகு இலைகள்
எரித்து குளிர்க்காய்கிறான்
வழிப்போக்கன்.
ந க துறைவன்.
காற்றின் போது
Thursday 19 July 2018
Thursday 12 July 2018
ஆசைகள்
Wednesday 11 July 2018
காதல்
Monday 9 July 2018
முற்றுபெறாமல்...!!
உனக்காக
காதல் கவிதை
செல்லில் எழுதி
குறுஞ்செய்தி
அனுப்பவும் நினைத்து
டைம் செய்யும் போதேதான்
அம்மாவின் அழைப்பு குரல்
" வாடா, ஒரு வேலை என்று..."
அப்பா, என்னைத் திட்டிவிட்டு
போகிறார்
வெளியில்
பூக்காரி குரல்
யார் மீது கோபப்படுவது?
வார்த்தைகள்
அப்படியே நிற்கின்றன
முற்றுபெறாமல்...!!
ந க துறைவன்.
முற்றுபெறாத கவிதை
Tuesday 3 July 2018
பற்றி...
பகல் நேரப் பொழுதில்
ஆழ்ந்து யோசித்திருந்தேன்
எதைப் பற்றி...?
இதைப் பற்றியல்ல
அதைப் பற்றியல்ல
அவள் பற்றியல்ல
வேறு
எதைப் பற்றி..?
அதுபற்றி
இப்பொழுது சொல்கிறேன்
அவசரப்பட வேண்டாம்
ஆ...
அவள் நேற்று சொன்னது
என்னைப் பற்றி...
இப்பொழுது
உங்களுக்கு சொல்கிறேன்
அவளைப் பற்றி
கொஞ்சமாய்...
ந க துறைவன்.
அவள் பற்றி...