*உங்களைத் திட்டுபவர் அல்லது துன்புறுத்துபவர் மீது
உங்கள் இதயத்தில் எந்தவிதமான பகைமை உணர்ச்சியையும்
கொள்ளாதீர்கள். இது வெளிப்படையாக கோபத்தைக் காட்டுவதை
விட மிகவும் மோசமானது. இது மானசீகப் புற்று நோய். பகைமையை
வளர்க்காதீர்கள். மறவுங்கள். மன்னியுங்கள். இது ஏதோ வெறும்
லட்சியவாத பழமொழி அல்ல. உங்கள் அமைதியைப் பாதுகாக்க
ஓரே வழி இது தான்.
*உங்களுக்குப் பிடித்தமான வேலை அல்லது பொழுது போக்கில்
நீங்கள் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்களானால் உங்களுக்கு மிகுந்த மன
அமைதி கிட்டும்.
*உங்களுக்கு மன அமைதி வேண்டுமானால் நீங்கள் செய்யக் கூடாது
என்று எதையெல்லாம் நினைக்கறீர்களோ அந்த எல்லாக் காரியங்களையும்
செய்யாமல் நிறுத்துங்கள். அதே போல நீங்கள் செய்ய வேண்டும் என்று
நினைக்கும் காரியங்களை உடனே செய்யத் தொடங்குவதும் அதை போல
முக்கியததுவம் வாய்ந்ததாகும்
.
*ஓரு சில நம்பமான நண்பர்களிடம் மட்டுமே பழகுங்கள். பழக்கத்தைப்
பெருக்க வேண்டாம். எவருடனும் அதிகமாக நெருக்கிப் பழக வேண்டாம்.
அதிக நெருக்கம் அலட்சியத்தை உருவாக்கி உணர்ச்சிகளை உருக்கலைத்து
மன அமைதியைக் கெடுக்கிறது.
*வாழ்க்கையில் நேரிடும் ஓவ்வொரு அனுபவத்தையும் அது வரும் விதத்திலேயே
ஏற்றுக் கொள்ளுங்கள். முணுமுணுக்காதீர்கள். எரிச்சல் கொள்ளாதீர்கள்.
வருந்தாதீர்கள். மகிழ்ச்சி அடையவும் வேணடாம். அமைதியாயிருங்கள்.
-ஆதாரம்:- ஸ்ரீ சுவாமி சிவானந்தரின் “மன அமைதி”-என்ற சிறு
பிரசுரத்திலிருந்து.