*
பாதையோரம் விளம்பரங்கள்
பலப்பல உண்டு
கடந்துப் போகும்
மனிதர்கள் முகஞ்சுளித்துப்
போகிறார்கள் வெறுப்போடு
கண்டு.
*
ஊரெல்லாம் அன்று
ஒரே புரளி
அந்தப் பெண் தற்கொலைக்கு
விரும்பி
அரைத்துக் குடித்த
விதை அரளி.
*
அரிசியில் பொறுக்கக் கிடைக்கிறது
கல்
வாட்டி வதைக்கின்றது எந்நாளும்
மனதில் நெருடலாய் பல சிக்கல்.
*
No comments:
Post a Comment