*
இசை விரும்பி
நீயென்பது
எத்தனையோ
முறைச்
எனக்குச்
சொல்லி
விளக்கி
இருக்கிறாய்.
மெல்லிசை
கர்நாடக இசை
மேனாட்டு
இசையென சில
கற்றிருப்பதாகச்
சொல்லி
கொஞ்சம்
பாடிக் காட்டினாய்.
நான்
விரும்பி ரசித்தேன்.
இசைப்
பிரியையின் ரசிகன்
என்பதில்
எனக்கு மகிழ்ச்சி.
ஒரே
ஒருமுறை எனக்காக
ஆனந்தபைரவி
ராகம் மட்டும்
பாடு…
பாடு….கேட்கிறேன்.
பாடல்களைப்
பதிவேற்றம் செய்து
எனக்கு
வாட்ஸ்அப்பில் அனுப்பு
விரும்பிக்
கேட்டு ரசிக்கிறேன்
இசை
அலையில் கலந்து
இணைய
விரும்புகிறேன்.
இருவர்
வசமாகட்டும்
இனிய
இன்னிசை.
**
No comments:
Post a Comment