*
Tamil Essay
*
முதுமைக் காலத்தை,
முதியோர் பூரணமாக உணர்ந்து
அனுபவித்து தன்
இறுதி நாட்களைக் கழித்து வர வேண்டி
இருக்கிறது. அவ்வப்போது
ஏற்படும் இன்பத் துன்பங்களைக்
கடந்து, உறவுகள்
வெறுக்கும் சூழலைக் கடந்து முன்னேற
வேண்டியிருக்கிறது.
முதியோர்களின் உள்ளக் கிடங்கில்
எத்தனை எத்தனையோ
மனச் சுமைப் புதையல்கள் மண்டிக்
கிடக்கின்றன. அவைகளையெல்லாம்
மறந்து கொஞ்சமேனும்
முதியோர் குறித்த
செய்திகள். விவரங்கள், நல்ல இலக்கியங்கள்
படித்தறிந்து மன
ஆறுதல் பெற்று வாழ்ந்திடல் அவசியம்.
முதுமை, வாழ்வில்
நாம் வாழ்ந்துக் கழித்த நாட்களின் வளமை
யான இறுதி பருவக்
காலமாகும்.
*
இன்றைய, தமிழ்
ஹைக்கூக் கவிதைகளில், முதியோர்களைப்
பற்றி கவிஞர்கள்
எவ்வாறெல்லாம் சிந்திக்கிறார்கள், சித்தரிக்
கிறார்கள் என்பதனைச்
சற்றுப் பார்ப்போமா?
*
இளமையில், வாலிபத்தில்
உடலின் ரோமங்கள் மிகக் கருப்பாகிப்
பளபளப்பாக மின்னும்
அதே நேரத்தில் வயது ஏற ஏற கருப்பு
நிறம் மெல்ல மெல்ல
மாறி வெண்மைப் படரத் துவங்கும்.
அதையே வெண்நரை
என்கிறோம். ஆக, நிறங்களே வயதினை
உணர்த்துகின்றன
என்பதை கவிஞர். ந.க. துறைவன் தன்
ஹைக்கூக் கவிதையில்
இப்படிச் சொல்கிறார்
இளமையில் கருமை
முதுமையில் வெண்நரை
வயதினை உணர்த்தும் வண்ணங்கள். {உப்பு பொம்மைகள்-நூல்}
பக்கம்
– 12.
ஒரு மரத்தின் வயதினை
எத்தனை ஆண்டுகள் என்று கணக்கிடுவது
மிகச் சிரமமானதேயாகும்.
அதைத் தோராயமாகத் தான் மதிப்பிடுவர்
தாவரவியல் வல்லுநர்கள்.
அம்மரத்தின் இலைகள் பருவக் காலத்தில
பழுத்து பொன்னிறமாக
பூமியில் உதிர்க்கும். அவைகள் பார்ப்பதற்கு
ரொம்ப அழகாகவிருக்கும்.
அதனையே சருகுகள் என்கிறோம். அச்
சருகுகளை முதுமைக்
கவிதைகள் என்று வர்ணிக்கிறார் கவிஞர்.
மித்ரா.
காலம் எழுதும்
முதுமைக் கவிதைகள்
சருகுகள். { மித்ரா – புல் நுனி வைரங்கள்-
நூல் – பக்கம் – 159 }
சருகுகள் போன்று
இம்மனித உடல் இறுதியில் பூமியில் உதிர்ந்து
விடுகின்றன. என்பதை உணர்த்துகின்ற அழகியல்
ஹைக்கூவாகத்
திகழ்கிறது.
*
எந்தவொரு சங்கதியையும்
நல்லதாகப் பார்ப்பது என்பது நேர்மையான
சிந்தனையாகும்.
சில நேரங்களில் முரணாகத் தீய எண்ணங்களை
மனம் தோற்றுவிக்கும்.
புத்தாண்டு தினத்தில் தன் வயதான
காலத்தில் அவருக்கு
இப்படித் தோன்றுகிறது.
அது நல்லது இதுவும் நல்லது
புத்தாண்டு தினம்
என் வயதான காலத்தில்
-
ரையாட்மோ.
தமிழில்: பரிமளம்சுந்தர்- ”
கசிகிறது மழைநீர் ”
என்ற நூல் – பக்கம் – 10.
ரையாட்டோவின் இந்த
ஜப்பானிய ஹைக்கூ பலப்பலப்
பரிமாணங்களில்
சிந்திக்க வைக்கிறது என்பதை அறியலாம்..
*
பொம்மைகளில் முக
அழகு செய்கையாக இருந்தாலும்,
பார்ப்பதற்கு ரசிக்கவே
தோன்றுமல்லவா! குழந்தைகள் விரும்பி
விளையாடும் பொம்மைகளுக்கு
முதுமை என்பதில்லை. அவைகள்
வயதானவைகள் என்று
யாரும் உத்தேசிப்பதில்லை. பிள்ளைப்
பருவம் முதல் பல்வேறு
தோற்றங்களில் வடிவமைக்கப்படும்.
அவ்வவ் வடிவங்களிலே
பார்த்துக் களித்து இன்புறலாம்.. இருப்பினும்
அவைகளை விட நான்.
முதுமையடைந்து விட்டேன் என்று
பறைசாற்றுகின்றார்
செய்பூ என்ற ஜப்பானியக் கவிஞர்.
பொம்மைகளின் முகங்கள்
நான் ஒரு போதும் உத்தேசிக்கவில்லை
என்றாலும் முதுமையடைந்து விட்டேன்.
-
-
செய்பூ.
-
-
தமிழில் “ பரிமளம்சுந்தர். மேலது-பக்கம்-22..
நான்
முதுமையடைந்து விட்டேன் என்ற ஜப்பானிய கவிஞரின்
பெருமிதம்
போன்று, ஒவ்வொரு மனிதரிடம் இருக்க வேண்டியது
அவசியமாகும்.
இயற்கை மனிதனுக்குக் கொடுத்தச் சிறந்த பரிசே
முதுமையாகும்.
முதியோர்களாகிய நம்மில் ஒவ்வொருவரும்
தனது
உடலைப் பேணிப் பாதுகாத்து பிரச்சனைகளின்றி அமைதியாய்,
ஆரோ்க்கியமாய்
வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள
வேண்டும்.
நூறாண்டு வாழ்வதற்கான மருத்துவர்கள் கூறும்
ஆலோசனைகளைக்
கவனத்தில் வைத்துக் கடைப்பிடிக்க வேண்டும்.
முதியோர்களை
அவமதிக்கும் புல்லர்களின் செயல்களை வென்று,
இச்கமூகத்தில்
இந்திய உயர்குடிமகன் என்ற உன்னதநிலை எட்டி,
ஏற்றமுடன்
வாழ்ந்துக் காட்டுவோம்…!!.
*
அன்புடன்
ந.க.
துறைவன்
வேலூர்
– 632 009.
செல்
:- 9442234822 / 8903905822
-
.