Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Monday 14 October 2013

இயற்கையின் நியதி



தாமரை, ரோஜா,
மல்லி, முல்லையென
எத்தனையோ வகைப்
பூக்கள்
கடவுளுக்குப் படைக்கின்றனர்
அந்தப் பூக்களுக்குத் தான்
யாருக்குப் படைக்கிறோம்
என்பது தெரியுமா?
அதற்குத் தெரிந்ததெல்லாம்
மலர்தல், உதிர்தல் என்ற
இயற்கையின்
நியதி மட்டுமே…!

Sunday 6 October 2013

உடலின் பேரின்பம்

பெண்ணைத் தேடு
காதலி
காதலை உணர்
அனுபவி.
காதல் உன்னதம்
உடலின் பேரின்பம்
வென்றவர்க்குத்
தென்றல் காற்று
தோற்றவர்க்கோ

கடும்புயல்! !

அலைகளில் அலைகழிந்து...

அஸ்தியை
கடல் நீரில் உள்
அமுக்கியதும்
மேலெழுந்து
மிதந்து மிதந்து
முன்னும் பின்னும்
அலைகளில்
அலைகழிந்து
மெல்ல மெல்ல
கரையத் தொடங்கியது
அந்த
அஸ்தியின் வாசம்
பிடிக்காமலோ
என்னவோ
விலகி விலகி
ஓடின மீன்கள்!

---

கிராமங்களில்
அவ்வளவு
கண்டிப்புடன்
கடைபிடிக்கிறார்கள்
காலம் காலமாய்
மாலை நேரம்
விளக்கு வைச்சதும்
கைமாத்தாய்
எவருக்கும் எவரும்
கொடுப்பதில்லை
சமையல் உப்பு.

கவிதா மண்டலம்-இதழ்

சனவரி 2013.

அத்துமீறும் வன்முறைகள்

ஊரெங்கும்
வெடிகுண்டு,
கலவரம், மரணம்.
பயந்து ஒதுங்கும்
மக்கள் நெரிசல்,
அத்துமீறும்
வன்முறைகள்,
அமைதியாய்
அச்சமின்றி
வேடிக்கை பார்க்கும்
உயர்கோபுரத்திலிருந்து
வெண்புறாக்கள்.

அருவி இதழ்

அக்-டிசம்2011