*
1.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு.
இது
எத்தனை நாளைக்கு பதவியோ? வாழ்த்துக்கள்.
2.
சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற
தீர்ப்பு. திமுக நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. திமுக செயல்தலைவர்
மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
உங்க
கட்சியிலேயும் வழக்கு நிலைவையில் இருக்குங்க. ஞாபமிருக்கட்டும் தலைவரே!
3.
சிறையில் வெள்ளை சேலை சீருடையில் சசிகலா.
மனம்
அமைதி பெற சிறந்த ஆடை வெள்ளை என்பதால் சிறைத்துறை தேர்வு செய்து கொடுத்துள்ளது.
4.
தமிழகம் எனது .இரண்டாவது தாய் வீடு. தலைமை
நீதிபதி எஸ்.கே. கவுல் நெகிழ்ச்சி.
தமிழக
கலாச்சாரமும், பாரம்பரியமும் தலைசிறந்த ஒன்று. இதைக் கண்டு ஆச்சியமடைந்தேன். காதல்,
வீரம், சுயமரியாதை எல்லாம் தமிழக்தின் அடையாளம். தமிழ்மொழி 5 ஆயிரம் ஆண்டு தொன்மையான
பாரம்பரிய மொழி. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே “ யாதும் ஊரே யாவரும் கேளீர் ” என்றும்
“ தீதும் நன்றும் பிறர் தர வாரா ” என்றும் சங்ககால தமிழ் புலவர் எழுதியுள்ளார்.
அத்தனை பாரமபரியம், கலாச்சாரம் மிக்க தமிழகத்தில்
தலைமை நீதிபதியாக பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழகத்தை எனது இரண்டாவது
தாய் வீடாகத்தான் கருதுகிறேன்.
நீதிபதிக்கு
எழுதி கொடுத்ததைச் சரியாகவே படித்துள்ளார். போய் வாருங்கள் சார்.
ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 17-02-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
*