தினமும்
குடிப்பவர்கள், ஒருநாள் விட்டு ஒருநாள் குடிப்பவர்கள், மாலையில் மட்டும் குடிப்பவர்கள்,
காலையிலிருந்து குடிப்பவர்கள், ஞாயிறு மாலையில் மட்டும் குடிப்பவர்கள், சனிக்கிழமை
இரவு மட்டும் குடித்துவிட்டு தாமதமாக வீட்டுக்கு வருகிறவர்கள், மனைவியை குழந்தையை விட்டுவிட்டு
வெளியூர் வேலைக்குக் போகும்போது குடிப்பவர்கள், வெளியூரிலிருந்து வேலை முடிந்து மனைவி
குழந்தைகளைப் பார்க்கிற சந்தோஷத்தில் குடிப்பவர்கள், குடிப்பவர்களுடன் துணைக்கு வந்து
குடிப்பவர்களுக்காகக் குடிப்பவர்கள், குடித்து விட்டு பேசுவதற்காகக் காத்திருப்பவர்கள்,
பேசிவிட்டு குடிப்பதற்காகக் காத்திருப்பவர்கள், குடிக்கும்போது கடன்காரர்களுக்கு செல்போனில்
பதில் சொல்பவர்கள், குடிக்கும்போது மேலதிகாரிகளுக்கு செல்போனில் பதில் சொல்பவர்கள்,
குடிக்கும்போது யாரும் தங்களுடன் இல்லையே என்ற வருத்தத்தில் குடிப்பவர்கள், குடிக்கும்போது
இத்தனை பேர் தங்களுடன் இருக்கிறார்களே என்கிற சந்தோஷத்தில் குடிப்பவர்கள், மனைவியின்
கொடுமைக்காகக் குடிப்பவர்கள், கொடுமை செய்யாத மனைவியின் அன்புக்காகக் குடிப்பவர்கள்,
தனக்கு அடுத்தவனின் மனைவி கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தில் குடிப்பவர்கள், தன் மனைவி
அடுத்தவனுடன் இருக்கிறாளே என்ற துக்கத்தில் குடிப்பவர்கள், காமெடி நடிகர் வடிவேல் அடிவாங்கிக்
கொள்கிற காட்சியைப் பார்த்தபடி குடிப்பவர்கள், எம்.ஜி.ஆர், சரோஜாதேவி டூயட் பாடலைப்
பார்த்துக் கொண்டு குடிப்பவர்கள், கண்ணதாசன் தத்துவப்படலைக் கேட்டுக் கொண்டு குடிப்பவர்கள,
தங்களை தத்துவமாக்கிக் குடிப்பவர்கள், குடிப்பது பாவம் என்று சொல்லிக் கொண்டு குடிப்பவர்கள்
என்று அத்தனை பேரும் அங்கிருந்தனர்.
ஆதாரம்
; “ மைதானம் அளவு உலகம் ” - எஸ். செந்தில்குமார்
எழுதிய சிறுகதை – உயிர்மை – மே – 2016 – பக்கம் – 39.
தகவல்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment