*
1.
சமூகநல
திட்டங்களைப் பெறும் பயனாளிகளிடம் ஆதார் எண் கட்டாயப்படுத்தி கேட்கக் கூடாது. மத்திய
அரசுக்கு உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்.
மத்திய அரசு ஆதார் வேணும்கிறது.
உச்ச நீதிமன்றம் கேட்கக் கூடாது என்கிறது. இவர்களுக்குள் அதிகார விளையாட்டுப் போட்டி
கம்பீரமா நடக்கிறது.
2.
ஆர்.கே.
நகர் தேர்தலுக்காக தள்ளிப் போட முடியாது. டிடிவி. தினகரன் மீதான வழக்குகள் தினமும்
விசாரிக்கப்படும். எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு.
தொகுதியிலும் இருப்பார். நீதிமன்றத்திலும்
இருப்பார். குற்றவாளியை விசாரணை செய்துகிட்டே தேர்தல்லே நிற்பதற்கு சட்டத்தில் இடம்
இருக்கா? நீதிமன்றம் நினைத்தால் தடை செய்ய முடியாதா? இதொரு அர்த்தநாரி சட்டம்.
3.
31
இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம். நெடுவாசலில் மக்களின் ஒப்புதலுடன் திட்டம்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உறுதி.
எப்படியோ? வோட்டுப் போட்ட மக்களுக்கு
துரோகம் செய்றதுன்னு முடிவாயிடிச்சி. ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணி துவங்கப் போகுது,
பிள்ளையும் கிள்ளிவிட்றாங்க. தொட்டிலையும் ஆட்டிவிட்றாங்க.
4.
சிவசேனா
எம்.பி. ரவீந்தர கெய்க்வாட்டு ஏர் இந்தியாவின் 60 வயது மேலாளரை 25 முறை தனது காலணியால்
தாக்கினார்.
எம்.பி. செய்தா ஒன்னு. பொதுமக்கள்
செய்தா ஒன்னா? செருப்பு வீசியெறிபவனைக் கடுமையா தண்டிக்கும் சட்டம் எம்.பி. 25 முறை
அடிக்கிறாரே, இவருக்கென்ன தண்டனை? விருது கொடுப்பாங்களா?
ஆதாரம்
; தி இந்து – நாளிதழ் – 28-03-2017.
தகவல்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment