‘
கருவால் மூக்கன் ‘ பறவை கிளியூர் குளத்துக்கு வலசை வருகை.
நியூசிலாந்தின்
வடக்குத் தீவில் உள்ள மிராண்டா என்னும் இடத்தில் இருந்து 2007 மார்ச் 17 – ந்தேதி புறப்பட்ட
இந்த சிறிய பறவை இரைக்காகவோ, தண்ணீருக்காகவோ எங்கும் தரையிறங்காமல் 8 நாட்கள் பறந்து
10,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ‘ யாலு ஜியாங் ‘ என்ற இடத்தை அடைந்தது.
பின்னர்,
ஐந்து வார ஓய்வுக்குப் பின் அங்கிருந்து கிளம்பி 5 நாட்களில் 7,400 கிலோமீட்டர் தூரம்
பறந்து இனப்பெருக்கம் செய்யும் இடமான மேற்கு அலாஸ்காவின் யூகான் – குஷாக்வின் முகத்துவார
பிரதேசத்தை அடைந்தது. பின்னர, 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் ஆகஸ்ட் 30-ல் புறப்பட்டு
வேறு பாதையில் 11,600 கிலோமீட்டர் தூரம் ஓரே மூச்சில் பறந்து எட்டரை நாட்களில் தான்
கிளம்பிய இடமான நியூசிலாந்தின் மராண்டா பகுதியை அடைந்தது.
இந்த
சிறு பறவை எறத்தாழ 6 மாதங்களில் 29,200 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளது குறிப்படத்தக்கது.
ஒரே
மூச்சில் எங்கும் நிற்காமல் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு பறக்கும் கருவால்
மூக்கன் – திருச்சி அருகே கிளியயூர் கிராமத்தில் உள்ள குளத்துக்கு வலசை( இடப்பெயர்ச்சி
) வந்துள்ளது.
ஆதாரம்
; தி இந்து – நாளிதழ் – 19-03-2017.
தகவல்
; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment