*
பேருந்தில் நின்றுக்
கொண்டே பயணிக்கும்போது செல்போனில் நீ அழைத்தாய். பேசுகிறேன். பக்கத்திலிருப்பவர்கள்.
என்ன பேசுகிறேன்.
யாரிடம் பேசுகிறேனென்று
பேச்சை உற்றுக் கேட்கிறார்கள். இன்னும்
சிலரும் என்னையே
பார்க்கிறார்கள். ஏதோவொரு நிறுத்தத்தில் இறங்க
முயன்ற பெண் எரிந்து
விழுந்துக் கடக்கும்போது, அவள் கூந்தலில் சூடியிருந்தப் பூச்சரம் என் சட்டைப் பட்டனில்
மாட்டிக் கொண்டிருக்சிறது.
எடுத்துவிட்டுப்
பிறகு பேசுகிறேன். “ இரு… இரு… இப்பப் பேசுறேன் கேட்கிறதா?. எடுத்துவிட்டுவிட்டேன்.
அவளும் போய்விட்டாள். இப்பச் சொல்…
பேசு… உம்… துண்டிக்கப்பட்டிருந்தது
செல் இணைப்பு.
*
No comments:
Post a Comment