*
அழுது அடம் பிடித்து
ஆர்ப்பாட்டம் செய்து
தனக்குத் தேவையானவைகளைச்
சாதித்துப் பெற்றுக்
கொள்கின்றன
ஆசைக் குழந்தைகள்.
*
கருந்திராட்சைப்
பழத்தைக் காட்டி
அம்மா,
எனக்கு அந்தக்
கோலிப் பழம்
வேணுமென்று
அடம் பிடித்துக்
கேட்கின்றது
அம்மு குட்டிகள்.
*
பொரித்த வற்றல்
கொடுத்தால் தான்
ஒரு வாய் சோறு
ஊட்டிப்பேன் என்று
அடம் பிடிக்கின்றது
செல்லக் குழந்தைகள்.
*
No comments:
Post a Comment