தூங்குவது போன்று
பாசாங்கு
தூங்கவில்லை
தூங்க முயற்சிக்கிறாள்
தூக்கம் வரவில்லை
தூக்கம் வர என்னென்னவோ
நினைக்கிறாள்
தூக்கம் வரவில்லை
நினைப்பதும் தூக்கத்திற்கு
தடையென நினைப்பை
நிறுத்துகிறாள்
தூக்கம் வரவில்லை
அருகில் துணையில்லை
அன்பு காட்ட குழந்தையில்லை
தனிமையில் விக்ரதி
தூக்கம் வரவில்லை
நினைப்பின் ஊடே
எப்பொழுது தூங்கினாளோ
அவளுக்கே தெரியாது?
தூங்காமல்
தூங்கிக் கொண்டு
இருக்கிறாள்
சட்டென வெளியில்
சத்தம்
பதறி எழுந்து போகிறாள்
கதவைத் திறக்க
மெல்ல திறந்தாள்
அதிர்ந்தாள்
வெளியில் யாருமில்லை
எவரின் சுவடுமில்லை
வாடைக் காற்று
உள்ளே நுழைந்தது
எவராயிருக்கும்
இப்படி செய்தது?
கேள்விக்குள்ளொரு
பிரமை.
ந.க. துறைவன்.
No comments:
Post a Comment