*
முல்லா நஸ்ருதீன் ஒரு பெண்ணிடம் பேசிக்கொண்டு மிகப்பெரிய விஷயங்களைக்
கூறிக்கொண்டு இருந்தார். மிகவும் கற்பனைவளம் மிக்கவனாக ஆகிவிட்டார். அந்தப் பெண் மணியைப்
பார்த்து “ உங்களது கண்கள் – ஒருபோதும் இப்படிப்பட்ட கண்கள் படைக்கவில்லை. மேலும் உங்களது
முகம் அது ஒரு நிலவு போன்று இருக்கிறது. உங்களைச் சுற்றிலும் உள்ள பிரகாசம் மற்றும்
நீங்கள் உருவாக்குகிற அதிரவலை – இது வரை நடந்திராத மிகப்பெரிய அழகான விஷயம் ” என்று
இபபடி வர்ணித்துக் கொண்டே சென்றார்.
ஆனால் பெண்கள், எப்பொழுதுமே
வாய்ப்பேச்சை விடவும் செயல்பாட்டில் இறங்குபவர்கள். எனவே அந்தப் பெண்மணி, “ நஸ்ருதீன்
நீ என்னை திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாயா? என்று கேட்டார்.
உடனே நஸ்ருதீன், “ தயவு செய்து விஷயத்தை மாற்றாதீர்கள். ” என்றான்.
ஆதாரம் : ஓஷோவின் “ திடீர் இடியோசை ” – என்ற நூல் – பக்கம் –
407.
தகவல் : ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment