*
குள்ளன்…!!
*
ஒரு முறை முல்லா நசிருதீன் ஒரு சர்க்கஸ் கம்பனி நிர்வாகியைச்
சந்தித்து வேலைக் கேட்டார்.
“ நான் ஒரு குள்ளன். என்னை உங்கள் சர்க்கஸில் வேலைக்குச் சேர்த்துக்
கொள்ள வேண்டும். ”
முல்லாவை அந்த நிர்வாகி மேலும் கீழும் பார்த்துவிட்டு எரிச்சலுடன்
சொன்னார்.
“ என்ன நீ குள்ளனா?. ஆறடி இரண்டு அங்குலம் உயரம் இருப்பாய் போல்
இருக்கிறது….”
“ ஆமாம், அதுதான் என் உயரம். ஆனால் இந்த உலகத்திலேயே மிகவும்
உயரமான குள்ளன் நான்தான் ”.
ஆதாரம் : ஓஷோவின் “ பாதை சரியாக இருந்தால்…. ” – என்ற நூல்
– பக்கம் – 224.
தகவல் ; ந.க.துறைவன்
*
No comments:
Post a Comment