*
ஜென் துறவியைச்
சந்தித்த ஒருவர் அவரிடம், “ எந்த வகையான மனிதர்கள் மனதைப் பண்படுத்துவதில் ஈடுபட வேண்டும்
” என்று கேட்டார்.
“ என்னைப் போன்றவர்கள்
” என்று பதிலளித்தார் துறவி.
“ உங்களைப் போன்ற
மாபெரும் குரு கூடவா. அதைச் செய்ய வேண்டும் ” என வியப்படைந்தார் கேள்விக் கேட்டவர்.
“ ஆம், மனதைப்
பண்படுத்துவது என்பது வேறொன்றுமில்லை. ஆடைகள் உடுப்பது, சாப்பிடுவது மாதிரி தான் ”
என்றார் குரு.
“ இதெல்லாம் நாம்
ஒவ்வொரு நாளும் செய்யும் காரியங்கள் தானே, மனப் பண்பாடு என்பதுதான் என்ன,?
“ நான் ஒவ்வொரு
என்ன செய்துக் கொண்டு இருக்கிறேன் என நீ நினைக்கிறாய்? என குரு கேட்டதும் பேச்சற்றுப்
போனார் கேள்விக் கேட்டவர்.
அன்றாட வாழ்வில்
எல்லாக் காரியங்களையும் நாம் கவனமாகவும் நே்மையாகவும் செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பதுதான்
மனப்பக்குவம். இப்படிச் செய்தால் சிறு செயலில்கூட உண்மையின் தெளிவான நாதம் ஒலிக்கும்.
ஆதாரம் ; ஜென்
கதைகள் – தமிழில் ; சேஷையா ரவி. பக்கம் 61.
* .
No comments:
Post a Comment